சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) 8 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடுகிறது.

சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in மற்றும் www.unom.ac.in இணைய தளத்தில் வெளியிடுகிறது. மறுமதிப்பீடு செய்ய ஏ11, ஏ12, ஏ13, சி.12, சி13 ஆகிய வரிசைகளில் தொடங்கும் நம்பர்களை கொண்டவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.
மற்றவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆன்–லைனில் பதிவு செய்ய 23–ந் தேதி கடைசி நாள்.

"ஐ.டி.ஐ. படித்து, பணி முன் அனுபவம் உள்ளோர், அபுதாபி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

"ஐ.டி.ஐ. படித்து, பணி முன் அனுபவம் உள்ளோர், அபுதாபி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அபுதாபியில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு, ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன், ஆறு ஆண்டு பணி அனுபவம் உள்ள சட்டரிங் கார்பெண்டர் மற்றும் ஸ்டீல் பிக்ஸ்சர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பெண்டர், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் தேவைப்படுகின்றனர்.தகுதி, அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், மருத்துவ காப்புறுதி, மிகை நேர பணி ஊதியமும் வேலை அளிப்போரால் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தை, "ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகம், எண்.42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை 32" என்ற முகவரியில் உள்ள, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய, 044 2250 2267 என்ற எண்கள் மூலமாகவோ,www.omcmanpoweqõ.com என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு, அரசு தெரிவித்துள்ளது.

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, 3,768 பேர் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வை, விரைவில் துவங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தமிழத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 296 இடங்கள் உள்ளன. இதுதவிர 20 சுயநிதி கல்லூரிகளில் இருந்து 994 இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். இதன்படி, 1,290 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் ஜூலை 14ல் துவங்கி, 30ம் தேதி வரை நடந்தது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற ஜூலை 31ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த நாளுக்குள், 3,768 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, 1,290 இடங்களுக்கு, 3,768 பேர் போட்டியில் உள்ளனர். தாமதமின்றி கலந்தாய்வை துவங்க வேண்டும் என இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி, ஒரு வாரத்திற்குள் கிடைக்கும் என நம்புகிறோம். இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாதத் துவக்கத்திலோ கலந்தாய்வை துவங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.