தமிழக பி.எட்., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 6ம் தேதி துவங்கும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில், அரசு சார்பில் 7 மற்றும் தனியார் கல்லூரிகள் 14 என, 21 பி.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2,155 இடங்கள் உள்ளன. இவை, ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நிரப்பப்படுகின்றன.இந்தாண்டு பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. 10,450 பேர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் நடக்கும்" என நெல்லையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) 8 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடுகிறது.
சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in மற்றும் www.unom.ac.in இணைய தளத்தில் வெளியிடுகிறது. மறுமதிப்பீடு செய்ய ஏ11, ஏ12, ஏ13, சி.12, சி13 ஆகிய வரிசைகளில் தொடங்கும் நம்பர்களை கொண்டவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.
மற்றவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆன்–லைனில் பதிவு செய்ய 23–ந் தேதி கடைசி நாள்.
Subscribe to:
Posts (Atom)