உலகளவில் கணித்தில் சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதனை சர்வதேச கணித அமைப்பு நடத்தி வருகிறது. இறுதிப்போட்டிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் சிறந்து விளங்குபவர்களுக்கு சர்வதேச விருது வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அதற்கான போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சர்வதேச அளவிலான முதல் பரிசை தட்டிச் சென்றார் ஈரான் நாட்டை சேர்ந்த மரியம் மிர்ஸா கனி என்பவர் .மேலும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இது போன்ற பரிசை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த விருது கணிதத்தில் நோபல் பரிசு என கருதப்படுகிறது.கடந்த 1977-ம் ஆண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிறந்தார். தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் கணித பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.சர்வதேச கணித அமைப்பு நடத்திய போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட தனது ஆய்வுக்கட்டுரையில், கணித நுட்பங்களை பல்வேறு வரம்புகளில் தொழில்நுட்பத்திறன் , தொலைநோக்குபார்வை ஆகிய சேர்க்கையை உள்ளடக்கிய அறி்க்கையை சமர்ப்பித்திருந்தார். இதனை ஆய்வு செய்த போட்டியின் நடுநிலையாளர்கள், முதல் பரிசுக்கான விருதை இவருக்கு வழங்கியுள்ளனர்.ஏற்கனவே கணிதத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்க கணித சங்கம் நடத்திய ஷாட்டர் பரிசுக்கான விருதையும், 2009-ம் ஆண்டு புளுமெந்தால் விருதையும் பெற்றுள்ளார்.மேலும் தற்போது நடந்து முடிந்துள்ள போட்டியில் மரியம் மிர்ஸாகனியுடன், பிரான்சின் ஆர்தர் அவிலா நியூஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த மஞ்சுல் பார்கவா, பிரிட்டனின் வார்விக் பல்கலை.,யை சேர்ந்த மார்ட்டின் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.போட்டியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள மரியம், "இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மற்ற பெண் அறிவியல், கணித விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும் எனவும், வரும் காலங்களில் போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்" தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதற்குள், மாநகராட்சி பள்ளிகளை விட்டு, பணி மாறுதல் பெற, போலி ஆசிரியர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 122 துவக்க பள்ளிகள் உள்ளன. இதற்காக, 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.இதில், பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள், கடந்த, 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். அப்போது, இடைநிலை ஆசிரியர் பயிற்சி, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அப்போது பணி நியமனம் பெற்ற பலர், முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல் 8, 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் போலியாக சான்றிதழ் பெற்று, அதன்மூலம் பணியில் சேர்ந்திருப்பதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, அடிக்கடி சர்ச்சை எழுவதும், மாநகராட்சி கல்வித்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார், மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது, இந்த விவகாரத்தில் இரண்டு பேரை பணிநீக்கம் செய்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இப்பிரச்னை வெடித்தது.அப்போது ஒன்பது பேர் மீது புகார் நிரூபிக்கப்பட்டு, எட்டு பேரை, தற்போதைய மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் பணிநீக்கம் செய்தார். ஒருவரின் சான்றிதழ் உண்மையானது என்று கூறி, அந்த ஆசிரியர் மட்டும் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் ஆய்வுசெய்து, போலி ஆசிரியர்களை முழுமையாக களையெடுக்க, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.இதற்காக 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ் நகல்களை, மாநகராட்சி கல்வித்துறை பெற்றது. ஆய்வின் அடிப்படையில், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களில் யாரும் போலி சான்றிதழ் பெற்றவர்கள் இல்லை என்ற முடிவுக்கு மாநகராட்சி வந்துள்ளது. ஆனால், தற்போதும் 50க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக விவரம் அறிந்த மாநகராட்சி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், இந்த போலி சான்றிதழ் ஆசிரியர்கள், தங்கள் பணியை காப்பாற்றிக்கொள்ள, மேலிடங்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்ட, ஆட்களை பிடிக்கும் வேலையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.சமீபத்தில் புதுச்சேரி அரசு பள்ளியில், போலி சான்றிதழ் ஆசிரியர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, மாநகராட்சி இந்த விஷயத்தை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கையில் எடுக்கலாம் என்று கருதப்படுவதால், சில ஆசிரியர்கள், மாநகராட்சி பள்ளியில் இருந்து வெளி இடத்திற்கு பணி மாறுதல் பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தடையில்லா சான்று கேட்டு சில ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த விஷயத்தில் மாநகராட்சி விஜிலென்ஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணையை மட்டும் நம்பாமல், போலி ஆசிரியர்களை களையெடுக்க, அரசு தனி குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)