போட்டோனிக்ஸ் துறையில் முறையான கல்வி பயின்றவர்களுக்கான தேவை உலகளவில் அதிகம் உள்ளது.

போட்டோனிக்ஸ் என்பது இயற்பியலின் ஒரு துணை பிரிவாகும். போட்டோன்ஸ் போன்ற துகள்களை, உருவாக்குதல், கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான அறிவியலே போட்டோனிக்ஸ் எனப்படுகிறது.இமேஜிங், ஹெல்த்கேர், மருத்துவம், பாதுகாப்பு, ஆப்டிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில், போட்டோனிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுவதால், இதுவொரு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மதிக்கப்படுகிறது.ஆற்றல் உருவாக்கம், கண்டறிதல், தகவல்தொடர்பு மற்றும் தகவல் செயல்பாடு ஆகிய பல்வேறு துறைகளில் இதன் பயன்பாடு பரந்து விரிந்து செல்கிறது.போட்டோனிக்ஸ் துறையில் முறையான கல்வி பயின்றவர்களுக்கான தேவை உலகளவில் அதிகம் உள்ளது. ஒருவரின் கல்வித் தகுதியைப் பொறுத்து, அவர், ஆராய்ச்சி இயக்குநராகவோ அல்லது துணை முதன்மை பொறியாளராகவோ பணி வாய்ப்புகளைப் பெறலாம்.இத்துறை நிபுணர்களுக்கு, டெலிகம்யூனிகேஷன் நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. ஆப்டிகல் தொடர்பான பொருட்கள் மற்றும் சிஸ்டம்களை சப்ளை செய்யும் நிறுவனங்களில், வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் போட்டோனிக்ஸ் அம்சங்களை சோதனை செய்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள நபர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.
* போட்டோனிக்ஸ் சர்வதேச கல்வி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கொச்சின் பல்கலைக்கழகம், கொச்சின்.
* ஐ.ஐ.டி., சென்னை.
* மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மணிப்பால்
* ஐ.ஐ.டி., டில்லி
* பெரியார் ஈ.வெ.ரா., கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
* ராஜரிஷி சாகு மகாவித்யாலயா, போட்டோனிக்ஸ் துறை, லத்தூர்.

பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம். உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான கலந்தாய்வை மூன்றாவது வாரத்தில் துவங்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது

 பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம். உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான கலந்தாய்வை மூன்றாவது வாரத்தில் துவங்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது.பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., உள்ளிட்ட எட்டு விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளன. இந்த படிப்புகளில் 7,200 இடங்கள் வரை உள்ளன.நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, இம்மாதம் 18ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இந்த படிப்புகளுக்கும் இடம் கிடைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. "தர வரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இரண்டாம் வாரத்தில் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மூன்றாம் வாரத்தில், கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்" என மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.