அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், எம்.பில். மற்றும் பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், எம்.பில். மற்றும் பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.முழுநேர மற்றும் பகுதிநேர அடிப்படையில் இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. கலை, அறிவியல், இந்திய மொழிகள், வேளாண்மை, நுண்கலை, கல்வி, கடற்சார் அறிவியல்கள், பல் மருத்துவம், மருத்துவம் மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், பல்வேறு பிரிவுகளில், மாணவர்கள் தங்களுக்கேற்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளலாம்.
எம்.பில். படிப்பிற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.1,000. பிஎச்.டி. படிப்பிற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.1,500.
விண்ணப்பங்கள், ஆகஸ்ட் 8ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வழங்கப்படுவதற்கான கடைசித் தேதி - செப்டம்பர் 1.
பூர்த்திசெய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாள் - செப்டம்பர் 5.
விரிவான விபரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.கடலூர் மாவட்டம், கடலூர் மற்றும் விருத்தாசலம் என இரு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. இரு கல்வி மாவட்டங்களிலும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கற்றல் அடைவுத் திறன் குறைந்திருப்பது கடந்தாண்டு நடந்த மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தேர்வில் தெரியவந்தது.இதையடுத்து, அரசு பள்ளிகளில் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்கொண்டது. குறிப்பாக, கற்றல் அடைவுத் திறன் குறைந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு உள்ளிட்டப் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது என்றும், இதன் மூலமாக அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் எளிதாக தேர்ச்சி பெறலாம் என்றும் முடிவு செய்தது.அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு தனித்தனியாக வினாத்தாள்கள் அச்சிட்டப்பட்டு, முதல் கட்டமாக 343 நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டது.இரண்டாம் கட்டமாக, இந்த வாரத்திற்குள் 277 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வை நடத்தி முடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அனைவருக்கும் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்" என்றார்.

போட்டித் தேர்வு நடத்தி, 2,176 டாக்டர்களை புதிதாக தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது

போட்டித் தேர்வு நடத்தி, 2,176 டாக்டர்களை புதிதாக தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, செப்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பல மருத்துவமனைகளிலும், டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் 34 பல் டாக்டர்கள் உட்பட 2,176 டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.போட்டித் தேர்வு மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளோர், செப்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.போட்டித் தேர்வு, செப்., 28ம் தேதி நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், &'www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

அரசு மற்றும் தனியார் பி.எட்., கல்வி நிலையங்களுக்கு, நீதிபதி பாலசுப்ரமணியன் கமிஷன், கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, அரசு கல்லூரிகளுக்கு 2,050; அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 10 ஆயிரம்; தனியார் கல்லூரிகளுக்கு 41,500; தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளுக்கு 46 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேல், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் ஓராண்டு பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்த, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. இதுவரை முடிவு வெளியாகவில்லை என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.