பிஎட் ஆசிரியர் கல்வியியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

பிஎட்  ஆசிரியர் கல்வியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 தமிழகத்தில் உள்ள 21 இடங்களில் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு  இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சென்னை மதுரை கோவை சேலம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியுமா?


சட்டசபையில்  கேள்விநேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது:

அத்தகைய பிரிவு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது குறித்து முதல் அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இனிவரும் காலங்களில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்தும் முதல் அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.  

தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: மாநிலத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் தொடங்கப்படும். இதில், 62 எம்.பில்., படிப்புகளும், 52 பிஎச்.டி., படிப்புகளும் அடக்கம்.மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் அளவில், பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். கடந்த 2011ம் ஆண்டில் எனது அரசு பொறுப்பேற்றதிலிருந்து, உயர்கல்வியில் புதிதாக 797 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 38.2% என்ற அளவிற்கு அதிகரித்தது.பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,100 காலி ஆசிரியப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பூர்த்தி செய்யப்படும். சென்னையில் இயங்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், புறநகர் பகுதியான காரப்பாக்கத்திற்கு மாற்றப்படும். அங்கே, அதற்காக, ரூ.95 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மயிலாடுதுறையில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.