கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களின் நலன், சமூக பாதுகாப்பிற்கு ரூ. 127 கோடியில் திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிதாக 15 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். பிற மாநில கட்டுமான தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு நல வாரியத்தில் இணைக்கப்படுவார்கள். என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்திகள் காப்பகம் அவசியம் என்றும் பணியின்போது இறக்கும் தொழிலாளருக்கான நிவாரண நிதி ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். சென்னை மருத்துவ கல்லூரியில் புதிய விடுதிகள் கட்டப்படும். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு பரிசு பெட்டகம் வழங்கப்படும். என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் மற்றும் பி.எஸ்சி., ரேடியோலஜி மற்றும் இமேஜிங் உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் மற்றும் பி.எஸ்சி., ரேடியோலஜி மற்றும் இமேஜிங் உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆகஸ்ட் 18ம் தேதி, காலை 10 மணிக்கு கவுன்சிலிங் தொடங்குகிறது. அன்றைய தினம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர் பிள்ளைகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.ஆகஸ்ட் 19ம் தேதி முதல், இதரப் பிரிவினருக்கான கவுன்சிலங் தொடங்குகிறது. முதல் நாளில் கட்-ஆப் மதிப்பெண் 199.00 இலிருந்து துவங்குகிறது. தொடர்ச்சியாக 23ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங், ஞாயிறு விடுமுறையைக் கடந்து, 25ம் தேதி திங்கட்கிழமை துவங்குகிறது.இறுதியாக, 27ம் தேதி புதன்கிழமையுடன் றிறைவு பெறுகிறது. இறுதி கட்-ஆப் மதிப்பெண் 148.50. சென்னை, கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தின் ஆடிட்டோரியத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
இதுகுறித்து அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் விபரங்களை அறிய http://www.tnhealth.org/notification/August2014/CSCHEPMC1415.pdf என்ற வலைதளம் செல்க.

இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு, பல்வேறு அரசுத் துறைகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்வதற்கான திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்திற்கு MHRD Internship Scheme - 2014 என்று பெயர். கல்வி, சமூக அறிவியல், அறிவியல், மானுடவியல், மேலாண்மை, பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் இளநிலை அல்லது முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வருவோர், இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முதல் batch, வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. முதல் batch -ல், வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள், மனிதவள அமைச்சகத்துடன் 2 மாதங்கள், நெருங்கி பணியாற்றும் வாய்ப்பினை பெறுகிறார்கள் மற்றும் அந்த காலகட்டத்தில், அவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர், இடைநிலை ஆசிரியர்கள், உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) கடைசி நாள் என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர், இடைநிலை ஆசிரியர்கள், உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) கடைசி நாள் என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.கள்ளர் சீரமைப்பு துறையில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள் -1 ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர் பிரிவில் உள்ள இந்து பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்பு பணி இன்றுடன் (ஆக. 12) முடிவடைகிறது. உரிய சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.,-ல் இள நிலை இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள 157 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


எரிசக்தி துறையில் பிரபலமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்.எல்.சி., என்ற பெயரால் நம்மால் அறியப்படுகிறது. பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி., தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் இள நிலை இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள 157 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.08.2014 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: மைனிங் அல்லது மைனிங் அண்டு சர்வேயிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.300/-ஐ ஆன்-லைன் முறையில் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.09.2014
இணையதள முகவரி: www.nlcindia.com





அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை, நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என, தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை, நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது.இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீத இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாக நியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால் தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.