பல்கலைக்கழக மானியக்குழுவின் - மவுலானா ஆசாத் தேசிய சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகை

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பில் மற்றும் பி.எச்டி, படிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு  உதவித் தொகையாக இது வழங்கப்படுகிறது. எம்.பில் படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.16 ஆயிரமும், பி.எச்டி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். மேலும், கல்வி உதவித் தொகையாக கலை, அறிவியல் சம்பந்தப்பட்ட எம்.பில் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கும், பி.எச்டி படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கும் உதவித் தொகையாக பெறலாம். இதேபோல், அறிவியல், பொறியியல் சம்பந்தபட்ட  படிப்புகள் எனில் முதல் 2 ஆண்டுகளுக்கு ரூ.12 ஆயிரமும், எஞ்சிய 3 ஆண்டுக்கு ரூ.25 ஆயிரமும் கிடைக்கும். நடப்பு நிதி ஆண்டுக்கான(2014-2015) கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்க்கு ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

யூ.ஜி.சி ( UGC) எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் உயர் கல்வி உதவித் தொகை

இந்தியாவில் உள்ள 650-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் உயர் கல்வி தரத்தை மேம்படுத்தும் பணியில் யூ.ஜி.சி (UGC)  எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் ம்ற்றும் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பல்வேறு விதமான உதவித் தொகைகளையும் வழங்குகிறது.இந்த உதவித் தொகைகளைப் பெறுவதற்கு யூ.ஜி.சி ( UGC)   யின் இணையதளத்தில் (www.ugc.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் ( ICAR ) உயர் கல்வி படிப்பு

டெல்லியில் தலமையகத்தை கொண்ட, மத்திய அரசின் வேளாண் அமைச்சகதின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில். உயர் அதிகாரம் படைத்த இந்த ஆய்வுக் குழுமம், 1929-ம் ஆண்டு சமூகப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியது. தற்போது இந்த ஆய்வு குழுமம் வேளாண் ஆராய்ச்சிக்கு முக்கியதுவம் அளித்து வருகிறது. மத்திய  வேளாண் துறை அமைச்சர் இதன் தலைவராக செயல்படுகிறார். நாடு முழுவதும் 49 வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், 4 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 தேசிய ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ்  செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்களில் அகில இந்திய அளவிலான 15 சதவீத இடங்களை நிரப்புவதற்கான  அகில இந்திய வேளாண் துறை நுழைவுத் தேர்வை  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்துகிறது. மேலும் விவரங்களை அறிய www.icar.org.in  என்ற இணையதளத்தில் காணலாம்.