பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வில் கடைபிடிக்கும் முறையைப் போலவே, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, "10ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு, செப்., 17ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.அதைப்போல, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்., 15ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது" என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்த கட்டணத்தில் நிறைந்த கல்வி அளிக்கும் அரசு கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்த கட்டணத்தில் நிறைந்த கல்வி அளிக்கும் அரசு கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், இந்த சட்டம் குறித்த சில சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன.தமிழகத்தில், தற்போது ஏழு அரசு சட்டக் கல்லூரிகளும், சேலத்தில் ஒரே ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. இதுதவிர, அம்பேத்கர் சட்டப் பல்கலையில் சிறப்பு சட்டப்பள்ளியும், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளியும் இயங்கி வருகின்றன.ஆண்டுதோறும், இவற்றில் 1,492 பேர், பி.ஏ.பி.எல்., பி.ஏ.பி.எல்., ஹானர்ஸ் பி.காம். பி.எல்., ஆகிய படிப்புகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். இதுதவிர, மூன்றாண்டு பி.எல்., படிப்பிலும் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு வாயிலாக நடக்கிறது.இந்த நடைமுறை, அரசு கல்லூரியில் மட்டுமே. சேலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் அரசு சார்பிலான சேர்க்கை நடப்பதில்லை.இவை தவிர, சென்னையில் எஸ்.ஆர்.எம்., சவீதா வேலூர், வி.ஐ.டி., தஞ்சை சாஸ்த்ரா ஆகிய நிகர்நிலை பல்கலைகளிலும், சட்ட பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் தனியார், நிகர்நிலை பல்கலை என அனைத்து கல்வி நிறுவனங்களுமே, அகில இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றே இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன.இவற்றில், மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், புதிய தனியார் சட்டக் கல்லூரிகள் துவக்கப்படுவதை தடுக்க, சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அந்த சட்டத்தில், குறைந்த செலவில், தரமான சட்டக் கல்வியை வழங்குவதற்கு, படிப்படியாக, அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு கொள்கை முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு, தனியாரால், தரமான சட்டக் கல்வியை அளிக்க முடியாதது, தனியாரால் திறம்படத் தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியததாலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.அதே நேரத்தில், இந்த சட்டம், யு.ஜி.சி., அங்கீகாரத்தை பெற்று இயங்கும் நிகர்நிலை பல்கலைகளுக்கு பொருந்தாது என, கூறப்படுகிறது.நிகர்நிலை பல்கலைகளில், சட்டக்கல்வி குறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து கூறியதாவது: தமிழகத்தில், சட்டக் கல்லூரிகளை தனியார் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கக்கூடியது. தனியார், சட்டக் கல்லூரிகளை நடத்தும்போது, அதன் கல்வித்தரம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை சொல்ல முடியாது.அதோடு, கல்விக் கட்டணமும் கூடுதலாக இருக்கும் என்பதாலும், தமிழக அரசு, அதற்கு அனுமதி மறுத்துள்ளது. ஆனால், எங்களைப் போன்ற தனியார் பல்கலைகள், சட்ட படிப்புகளை தொடங்க, பார் கவுன்சில் ஆப் இந்தியா முறைப்படி அனுமதி வழங்கி இருக்கிறது. அது வகுத்துத் தந்திருக்கும் அடிப்படையில்தான், பாட திட்டங்கள் இருக்கும். தமிழக அரசின் சட்ட பாடத் திட்டங்களை விட, கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.கட்டணமும், பார் கவுன்சில் அறிவுறுத்தி இருப்பது போல்தான் வசூலிக்கப்படுகிறது. அதனால், தனியார் பல்கலையின் மூலம் நடத்தப்படும் சட்ட படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.அதேநேரம், "மாணவர்கள் ஆர்வம் காரணமாக, அரசு சட்டக் கல்லூரிக்கான தேவை அதிகரித்துள்ளதாக" அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது.
மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது.அங்கீகாரம் இல்லாத 1,400 மழலையர் பள்ளிகளை வரும் 2015 ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.நோட்டீஸ் கிடைத்த மூன்று நாளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில் பள்ளியை மூட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் குறித்த முழு பட்டியல் தொடக்க கல்வித் துறையிடம் இல்லை. ஆனால் மாநிலம் முழுவதும் 2,000 மழலையர் பள்ளிகள் இருக்கலாம் என துறை வட்டாரம் தெரிவிக்கிறது.ஒரு பக்கம் மழலையர் பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பினாலும், அனைத்து பள்ளிகளும் கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று உள்ளிட்ட பல சான்றிதழ்களை சமர்பித்து அங்கீகாரம் கேட்டு முறையாக தொடக்க கல்வித் துறைக்கு விண்ணப்பித்தால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில், தலா 50 குழந்தைகளுக்கு குறையாமல் படித்து வருகின்றனர். அதன்படி இந்த பள்ளிகளில் (பிரீ கேஜி முதல் யு.கே.ஜி. வரை) ஒரு லட்சம் குழந்தைகள் படித்து வருவதாக அறிகிறோம். பட்டியலில் இடம் பெறாமல் விடுபட்ட மழலையர் பள்ளிகளை அடையாளம் காண, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.திடீரென 2,000 பள்ளிகளையும் மூடினால், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே ஒரு பக்கம் மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபக்கம் முறையாக அங்கீகாரம் பெற சம்பந்தப்பட்ட பள்ளிகள் தொடக்க கல்வித்துறையிடம் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்ததும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற்று அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.
Subscribe to:
Posts (Atom)