தமிழகத்தில் ரூ.103 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூட கட்டிடங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.


பள்ளி கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக ஏழை எளிய மாணவ, மாணவியர் இடை நிற்காது தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் கட்டணம் இல்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 கணினிகள், பிரிண்டர்கள், நகல் எந்திரம், எல்.சி.டி. புரஜக்டர் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்தை ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
ரூ.103 கோடியில்பள்ளிக்கூட கட்டிடங்கள்
மேலும், 22 மாவட்டங்களில் அமைந்துள்ள 76 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 81 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், சுற்றுச் சுவர், குடிநீர் வசதி; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டம், தரகம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போடிச்சம்பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிக் கட்டிடம்; அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள 186 அரசுப் பள்ளிகளில் 15 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 276 கூடுதல் வகுப்பறைகள்; காஞ்சீபுரம் மாவட்டம் - சிட்லபாக்கம் ஒன்றியம்; புதுக்கோட்டை மாவட்டம் - மணமேல்குடி ஒன்றியம்; நாமக்கல் மாவட்டம் - எருமைப்பட்டி ஒன்றியம் ஆகிய இடங்களில் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டிடங்கள்; வேலூர் மாவட்டம் - வேலூரில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையின் மண்டல அலுவலகக் கட்டிடம்; என மொத்தம் 103 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

மருந்துவம் சார் பட்டப் படிப்புகளில், முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், 2,317 இடங்கள் இன்னும் நிரப்பாமல் காலியாக உள்ளன.

 மருந்துவம் சார் பட்டப் படிப்புகளில், முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், 2,317 இடங்கள் இன்னும் நிரப்பாமல் காலியாக உள்ளன.இவை, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பி.எஸ்.சி., நர்சிங்., பி.பார்ம் உள்ளிட்ட, எட்டு விதமாக, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன.ஐந்து அரசுக் கல்லூரிகள், 197 தனியார் கல்லூரிகளிலும், 7,008 இடங்கள் இருந்தன. இதற்கான கலந்தாய்வு, ஆக., 19ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று, 617 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். மொத்தம், 4,691 பேர் வரை இடம் பெற்றனர். முதற்கட்ட கலந்தாய்வு நிறைவில், 2,317 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூகையில், "இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., மூன்றாம் வாரத்தில் நடத்தப்பட்டு, காலி இடங்கள் நிரப்பப்படும்" என்றார்.

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது. இதற்கு, மாணவர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சம்பந்தபட்ட மையங்களுக்கு, செப்., 1 மற்றும் 2ம் தேதியில், நேரில் சென்று, பதிவு செய்யலாம்.சிறப்பு மையங்கள் விவரத்தை www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.