அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று(செப்டம்பர் 1) துவங்குகின்றன.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று(செப்டம்பர் 1) துவங்குகின்றன. எதிர்கால கனவுகளோடு, மாணவர்கள் கல்லுாரிகளில் அடியெடுத்து வைக்கின்றனர். தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன.
கலந்தாய்வு: இதில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) இடங்களும் உள்ளன. இந்த ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் முடிந்தன. அனைத்து இடங்களும் நிரம்பின.
இடஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளில் மருத்துவக் கல்வி இயக்கக வழிகாட்டுதல்படி சேர்ந்தாலும், அரசு அறிவிப்பின்படி, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., வகுப்புகள், முறைப்படி இன்று துவங்குகின்றன. கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில், இடஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர், சிறந்த டாக்டர்களாகும் எதிர்கால கனவுகளோடு, இன்று கல்லுாரி வகுப்புகளில் அடி எடுத்து வைக்கின்றனர். அவர்களை, மூத்த மாணவர்களும் வரவேற்று, உற்சாகப்படுத்த தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம், சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

மாணவ, மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது.
மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். தலைமுடியை விரித்து விட்டபடி வராமல், இறுக்கமாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும்.
மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து கொண்டும், ஷூ அணிந்தும் வர வேண்டும். ஜீன்ஸ், டி - சர்ட் அணிந்து வருவோருக்கு வகுப்புகளில் அனுமதி இல்லை.
டாக்டருக்கு படிக்க வருவோர், கண்ணியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதால், இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
எச்சரிக்கை: இதுதவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. ராகிங் புகாரில் சிக்கினால், கல்லுாரியை விட்டு நீக்கப்படுவர் எனவும், எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை சிக்கலின்றி முடிந்தது. சுயநிதி கல்லுாரிகளில், ஐந்து கல்லுாரிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்ததால், 700 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

புதிர் கணக்கு மற்றும் அதற்கான தீர்வு

புதிர் கணக்கு மற்றும்  அதற்கான தீர்வு


A,B,C,D,E -ன் மதிப்புகளை கண்டுபிடியுங்கள்

அதற்கான தீர்வு



இந்திய ராணுவத்தின் பல் மருத்துவ பிரிவில் காலியாக உள்ள 37 டாக்டர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இந்திய ராணுவத்தின் பல் மருத்துவ பிரிவில் காலியாக உள்ள 37 டாக்டர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
Short Service Commissioned (SSC) Officer: 37 இடங்கள்.
தகுதி:

இறுதி வருடத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் பிடிஎஸ்/ எம்டிஎஸ் முடித்திருக்க வேண்டும். இந்திய பல் மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த மருத்துவமனையில் ஒரு வருடம் மருத்துவமனையில் தங்கியிருந்து துணை மருத்துவராக பணியாற்றியிருக்க வேண்டும். 31.12.2014 தேதி வரையில் செல்லுபடியாகும் வகையிலான நிரந்தர பல் மருத்துவ பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றுவதற்கான தகுந்த மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு; 
31.12.2014 தேதிப்படி 45க்குள்.
சம்பள விகிதம்:
ரூ.15,600 - 39,100, தர ஊதியம் ரூ.6,100 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின் பல் மருத்துவ படிப்பின் இறுதி வருட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Director General Armed Forces Medical Services, (DGAFMS/DENTAL2),
Room No.25, 'L' Block,
Ministry of Defence,
NEWDELHI 110001.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2014.