சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட். படித்தவர்களுக்கு சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு

 ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன் பி.லிட். படிப்பில் சேர்ந்து படித்தவர்களை சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட். படிப்பும் தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவியர் மூன்று ஆண்டு படிப்பான பி.லிட். முடித்தால் பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோவை மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில் சில ஆண்டுகளுக்கு முன் ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது.
உதாரணமாக 2007-08 கல்வியாண்டில் இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு குளறுபடிகளால் கல்வியாண்டுக்கான தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.
இதனால் டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின் ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். படிப்பில் சேர்ந்தனர்.
படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு அதிர்ச்சியே பதிலாக கிடைத்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில் பி.லிட். சேர்ந்திருப்பதால் அந்த பட்டம் செல்லாது என ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால் ஏராளமானோர் அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த 2007-08ம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து 2008-09ம் கல்வியாண்டில் படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால் செப்டம்பரில் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.
 படித்த படிப்புக்கான காலம் 2008-09வுடன் முடிவடைந்துவிட்டதால் 2009-10க்கான கல்வியாண்டில் பி.லிட். சேர்த்துக்கொண்டனர். அப்போது பல்கலைக்கழகம் தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
தற்போது இத்தனை ஆண்டு காத்திருப்பில் அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால் தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை. அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு எங்கள் வாழ்க்கை பலியாகிறது.
கடந்த ஆண்டில் இதேபோன்று படித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்

போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல் இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.

போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல் இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.
டி.ஆர்.பி. நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்த முறை டி.ஆர்.பி.க்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.
இந்நிலையை மாற்றி எளிமையான முறையில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து தற்போது டி.ஆர்.பி. தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால் கட்டணமும், வெகுமாக குறையும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயாக உள்ளது. இதுவே இணையதள முறைக்கு மாறினால் பதிவு கட்டணமாக மிகக் குறைந்த தொகையை வசூலிக்க வாய்ப்பு ஏற்படும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும் டி.ஆர்.பி. வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று பல வசதிகள் இருப்பதால் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது.
அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய அக்டோபர் 26ம் தேதி போட்டி தேர்வு நடக்கும் என டி.ஆர்.பி. அறிவித்துள்ளது. இதற்கு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பம் வழங்கப்படும் என டி.ஆர்.பி. அறிவித்துள்ளது.
இதற்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என டி.ஆர்.பி. எதிர்பார்க்கிறது. எனவே இந்த தேர்வில் இருந்து இணையதள பதிவு முறையை டி.ஆர்.பி. அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என டி.ஆர்.பி. வட்டாரம் நேற்று தெரிவித்தது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

 பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் ணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.


பேராசிரியர் - பெண்கள் ஆய்வுகள் ( இயக்குனர்). பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி : பி.ஹெச்டி., மற்றும் 10 ஆண்டுக்ள் அனுபவம்.

இணை பேராசிரியர் (உடற்கல்வி) - PB4 ஏ.ஜி. பி 9000 - - SCA (W) 1 போஸ்ட். கல்வித் தகுதி : பி.ஹெச்டி., மற்றும் 8 ஆண்டுகள் அனுபவம. 

உதவி பேராசிரியர் (உடற்கல்வி) - 3 போஸ்ட் ( 1 SCA-W; 1 எம்பிசி) - PB3 ஏ.ஜி. பி 6000 - கல்வித் தகுதி : உடற்கல்வி முதுகலை மற்றும் நெட் / SET / SLET.