தமிழக பி.எட்., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 6ம் தேதி துவங்கும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில், அரசு சார்பில் 7 மற்றும் தனியார் கல்லூரிகள் 14 என, 21 பி.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2,155 இடங்கள் உள்ளன. இவை, ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நிரப்பப்படுகின்றன.இந்தாண்டு பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. 10,450 பேர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் நடக்கும்" என நெல்லையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) 8 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடுகிறது.
சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in மற்றும் www.unom.ac.in இணைய தளத்தில் வெளியிடுகிறது. மறுமதிப்பீடு செய்ய ஏ11, ஏ12, ஏ13, சி.12, சி13 ஆகிய வரிசைகளில் தொடங்கும் நம்பர்களை கொண்டவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.
மற்றவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆன்–லைனில் பதிவு செய்ய 23–ந் தேதி கடைசி நாள்.
"ஐ.டி.ஐ. படித்து, பணி முன் அனுபவம் உள்ளோர், அபுதாபி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
"ஐ.டி.ஐ. படித்து, பணி முன் அனுபவம் உள்ளோர், அபுதாபி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அபுதாபியில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு, ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன், ஆறு ஆண்டு பணி அனுபவம் உள்ள சட்டரிங் கார்பெண்டர் மற்றும் ஸ்டீல் பிக்ஸ்சர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பெண்டர், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் தேவைப்படுகின்றனர்.தகுதி, அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், மருத்துவ காப்புறுதி, மிகை நேர பணி ஊதியமும் வேலை அளிப்போரால் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தை, "ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகம், எண்.42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை 32" என்ற முகவரியில் உள்ள, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய, 044 2250 2267 என்ற எண்கள் மூலமாகவோ,www.omcmanpoweqõ.com என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு, அரசு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)