பல துறைகளில் காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார்.

 குரூப் 2: கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும். கால்நடை பராமரிப்பு துறையில் 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்.மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில் 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இன்று முதல், வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம். வரும் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கும். தலா 100 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். பின் 60 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். பி.எல்., முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, இம்மாத இறுதியுடன் முடிகிறது. ஆர்.டி.இ., சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடக்கும் வகுப்புகளில், 25 சதவீத இடங்களை ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில், 11,462 தனியார் பள்ளிகள் உள்ளன.இவற்றில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின்படி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், கடந்த வார இறுதியில் எடுத்த கணக்குபடி, 89,382 இடங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வழங்கி உள்ளன.தொடக்கக் கல்வித்துறை கீழ், 7,130 பள்ளிகள் இருந்தபோதும், 5,441 பள்ளிகள் மட்டுமே ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கையை நடத்தி உள்ளன. 1,689 பள்ளிகள், சீட் தரவில்லை. மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ் உள்ள, 3,890 பள்ளிகளில், 3,642 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின்படி சீட் அளித்துள்ளன.248 பள்ளிகள் சீட் வழங்க மறுத்துள்ளன. இரு துறைகளையும் சேர்த்து 1,937 பள்ளிகள், சீட் வழங்க மறுத்துள்ளன. இந்த பள்ளிகள் மீது, விரைவில், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "ஆர்.டி.இ., அட்மிஷன் தராத பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் அளிக்க உத்தரவிடப்படும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தது.

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு, போட்டித்தேர்வு நடந்தது. இதில், பல கட்டங்களாக, பல பாடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.இயற்பியல், வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றவர் முடிவையும், நேற்றிரவு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல் 228, வணிகவியல் 300, பொருளியல் 257 பணியிடங்கள் என, 785 பணியிடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.