மருந்துவம் சார் பட்டப் படிப்புகளில், முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், 2,317 இடங்கள் இன்னும் நிரப்பாமல் காலியாக உள்ளன.இவை, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பி.எஸ்.சி., நர்சிங்., பி.பார்ம் உள்ளிட்ட, எட்டு விதமாக, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன.ஐந்து அரசுக் கல்லூரிகள், 197 தனியார் கல்லூரிகளிலும், 7,008 இடங்கள் இருந்தன. இதற்கான கலந்தாய்வு, ஆக., 19ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று, 617 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். மொத்தம், 4,691 பேர் வரை இடம் பெற்றனர். முதற்கட்ட கலந்தாய்வு நிறைவில், 2,317 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூகையில், "இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., மூன்றாம் வாரத்தில் நடத்தப்பட்டு, காலி இடங்கள் நிரப்பப்படும்" என்றார்.
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது. இதற்கு, மாணவர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சம்பந்தபட்ட மையங்களுக்கு, செப்., 1 மற்றும் 2ம் தேதியில், நேரில் சென்று, பதிவு செய்யலாம்.சிறப்பு மையங்கள் விவரத்தை www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பல துறைகளில் காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார்.
குரூப் 2: கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும். கால்நடை பராமரிப்பு துறையில் 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்.மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில் 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இன்று முதல், வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம். வரும் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கும். தலா 100 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். பின் 60 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். பி.எல்., முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)