பி.எட்., எம்.எட்., படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது

இந்தியா முழுவதும் கல்வி தரத்தை உயர்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பி.எஸ்.சி, பி.எ, படித்தவர்களுக்கு பி.எட்., என்ற ஆசிரியர் பயிற்சியும், பி.எட். படித்தவர்களுக்கு எம்.எட்., என்ற ஆசிரியர் பயிற்சியும், ஒரு ஆண்டு காலம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பி.எட்., எம்.எட்., படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்த கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக்குழு  பி.எட்., எம்.எட்., படிப்புகளின் காலத்தை 2 வருடமாக 2015-2016 ஆம் கல்வியாண்டு முதல் அமுல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.