எரிசக்தி துறையில் பிரபலமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்.எல்.சி., என்ற பெயரால் நம்மால் அறியப்படுகிறது. பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி., தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் இள நிலை இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள 157 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.08.2014 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: மைனிங் அல்லது மைனிங் அண்டு சர்வேயிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.300/-ஐ ஆன்-லைன் முறையில் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.09.2014
இணையதள முகவரி: www.nlcindia.com