பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ள துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் 25ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ள துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் 25ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு உரிய நேரத்தில் விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 25ம் தேதி முதல் தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுத்துறை இணைய தளத்தில் மேனிலைத் தேர்வு செப்டம்பர், அக்டோபர் 2014, தனித் தேர்வர்கள், ஹால்டிக்கெட் பிரின்ட் அவுட் என்று கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதிகளை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் பெறலாம்.எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வுகள் அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை, எழுத்து தேர்வு இரண்டையும் எழுத வேண்டும். தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேதி பிறகு அறிவிக்கப்படும்.