பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம். உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான கலந்தாய்வை மூன்றாவது வாரத்தில் துவங்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது.பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., உள்ளிட்ட எட்டு விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளன. இந்த படிப்புகளில் 7,200 இடங்கள் வரை உள்ளன.நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, இம்மாதம் 18ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இந்த படிப்புகளுக்கும் இடம் கிடைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. "தர வரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இரண்டாம் வாரத்தில் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மூன்றாம் வாரத்தில், கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்" என மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.