சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:இளங்கோவடிகள் நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்போருக்கோ, சிலப்பதிகாரத்தின் புகழ் பாடுவோருக்கோ, இளங்கோவடிகள் விருது வழங்கப்படும். தமிழ் புத்தாண்டு அன்று வழங்கப்படும் இந்த விருது 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது.* தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் செம்மல் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுக்கு மாவட்டத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவர். இது 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தகுதியுரை விருது உள்ளடக்கியது.* தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.*சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுடுமண், சுதை சிற்பம், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப் பொருட்களைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி. பதவிகளை நிரப்புவதில் இழுபறி
அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர் பதவிகளை நிரப்புவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது. காலி பணி இடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பதவிகளை எதிர்பார்த்து காத்து இருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.தமிழக அரசு துறைகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்வதில் டி.என்.பி.எஸ்.சி. முதலிடம் வகிக்கிறது. ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.இந்த அமைப்பின் தலைவராக இருந்த நவநீத கிருஷ்ணன் சமீபத்தில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினரான பாலசுப்ரமணியன் தலைவர் பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார்.நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அடுத்த ஓரிரு நாட்களில் புதிய தலைவர் நியமன அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய தலைவர் நியமிக்கவில்லை. உறுப்பினர் பதவிகளும் அதிக அளவில் காலியாக உள்ளன.ஷோபினி, ஜேசுராஜா, ராஜா உட்பட ஏழு பேரின் பதவிகாலம் முடிந்ததால் இந்த பதவிகள் காலியாக உள்ளன. தற்போதைய நிலையில் கூடுதல் பொறுப்பாக தலைவர் பணிகளைச் செய்யும் பாலசுப்ரமணியன், பன்னீர் செல்வம், ரத்னசபாபதி, பெருமாள்சாமி, குப்புசாமி, செல்வமணி ஆகிய ஆறு பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.எந்த பதவிகளும் நிரப்பப்படாததால் தேர்வாணைய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக துறை வட்டாரம் தெரிவிக்கிறது. 192 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் உதவியாளர் பணி இடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதாகவும் துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவும் ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், அரசின் தாமதத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.62 வயது அல்லது பதவி ஏற்றதில் இருந்து ஆறு ஆண்டுகள் முடியும் வரை மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்பதால் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடங்களை எளிமையாகக் கற்பித்து வரும் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடங்களை எளிமையாகக் கற்பித்து வரும் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
செல்போனைப் பயன்படுத்தி மாணவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களைக் கற்பித்து வருகிறார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜி.ஜரீனா பானு. கற்றலில் புதுமையைப் புகுத்தி வருவதற்காக இவருக்கு, ‘குளோபல் பிரிட்ஜ் ஐடி என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது.
செல்போனைப் பயன்படுத்தி மாணவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களைக் கற்பித்து வருகிறார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜி.ஜரீனா பானு. கற்றலில் புதுமையைப் புகுத்தி வருவதற்காக இவருக்கு, ‘குளோபல் பிரிட்ஜ் ஐடி என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவின் பியர்ஸன் ஃபவுண்டேஷன் அமைப்பு உருவாக்கியுள்ள பிரிட்ஜ் ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்போன் மூலம் எங்கள் பள்ளியில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், அறிவியல் பாடங்களை கற்பித்து வருகிறோம். மாணவர்களின் பாடத் திட்டத்துக்கு ஏற்ற வீடியோ படங்கள் ஆடியோ வசனங்களுடன் செல்போனில் இணைத்துத் தந்திருக்கிறார்கள். இந்த செல்போனை எங்கள் பள்ளியில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து, அதன் மூலம் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களையும், இணையத்தில் கிடைக்கும் தகவல்களையும் பயன்படுத்தி பாடங்களை நடத்தி வருகிறோம். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மேலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வருகிறார்கள். சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்து வருகிறார்கள். சரிவரப் படிக்காத மாணவர்கள், தேர்ச்சியடையும் அளவுக்கு படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் ஆசிரியை ஜரீனா பானு.
பிரிட்ஜ் ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செல்போன் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ‘ஈசி வித்யா அமைப்பு’ பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சியைப் பெற்ற ஆசிரியை ஜரீனா பானு, இதை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருவதற்காக பியர்ஸன் ஃபவுண்டேஷன் அமைப்பின் குளோபல் பிரிட்ஜ் ஐடி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் சான்றிதழும், நினைவுப் பரிசும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் அடங்கும்.
செல்போனைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கும் முறை பற்றி நம்மிடம் விவரித்தார் ஜரீனா பானு.
அறிவியலில் உணவுச் சங்கிலி என்றொரு பாடம் உள்ளது. இந்தப் பாடத்தின்படி, புல்லை மான்கள் உண்ணும், மான்களை கரடி, புலி போன்றவை உண்ணும் என்பது போன்ற தகவல்கள் வரும். இதை வெறுமனே பாடமாக நடத்தினால் மாணவர்களுக்கு போரடித்துவிடும். செல்போனில் உள்ள வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி மான்கள் புல் சாப்பிடும் காட்சியையும், புலிகள் மான்கள் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் காட்சியையும் டி.வி.யில் காண்பித்து விளக்கும்போது மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். இப்படி ஆங்கில இலக்கணத்தையும் விளையாட்டுப்போல வீடியோ காட்சிகள், ஆடியோ ஒலிகள் மூலம் கற்பிக்கிறோம். மாணவர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள். எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது, மேலும் உற்சாகத்துடன் பணியாற்ற என்னை ஊக்குவித்துள்ளது. இது எங்கள் பள்ளி ஆசிரியைகள், தலைமை ஆசிரியை அத்தியா பாத்திமா, மாநகராட்சி அதிகாரிகள் ஆகிய அனைவரின் ஒத்துழைப்பால் கிடைத்த ஒன்று" என்று மகிழ்கிறார் ஜரீனா பானு.
Subscribe to:
Posts (Atom)