இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது.டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக தேர்வர்கள் தரப்பில் இருந்து குறைகளை பெற்று நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும் குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி நிவாரணம் பெறலாம்.சான்றிதழ் சரிபார்ப்பு: இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.குறைதீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு வசதியாக, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது
பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு வசதியாக, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு: அரசு ஒதுக்கீட்டின் கீழ், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 600 இடங்களும், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், 1,500 இடங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 9,000 இடங்களும் உள்ளன.பிளஸ் 2 உடனடி தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கு வசதியாக, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை துணை கலந்தாய்வு அறிவிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 7ம் தேதி (இன்று) முதல், 14ம் தேதி மாலை 5:00 மணி வரை வழங்கப்படும். 16ம் தேதி ஆன்லைன் வழியில் கலந்தாய்வு நடத்தப்படும்.மாணவர்கள், விண்ணப்பித்த இடத்தில் பங்கேற்று, விரும்பிய ஆசிரியர் பயிற்சி பள்ளியை தேர்வு செய்யலாம். இவ்வாறு, கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
போட்டோனிக்ஸ் துறையில் முறையான கல்வி பயின்றவர்களுக்கான தேவை உலகளவில் அதிகம் உள்ளது.
போட்டோனிக்ஸ் என்பது இயற்பியலின் ஒரு துணை பிரிவாகும். போட்டோன்ஸ் போன்ற துகள்களை, உருவாக்குதல், கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான அறிவியலே போட்டோனிக்ஸ் எனப்படுகிறது.இமேஜிங், ஹெல்த்கேர், மருத்துவம், பாதுகாப்பு, ஆப்டிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில், போட்டோனிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுவதால், இதுவொரு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மதிக்கப்படுகிறது.ஆற்றல் உருவாக்கம், கண்டறிதல், தகவல்தொடர்பு மற்றும் தகவல் செயல்பாடு ஆகிய பல்வேறு துறைகளில் இதன் பயன்பாடு பரந்து விரிந்து செல்கிறது.போட்டோனிக்ஸ் துறையில் முறையான கல்வி பயின்றவர்களுக்கான தேவை உலகளவில் அதிகம் உள்ளது. ஒருவரின் கல்வித் தகுதியைப் பொறுத்து, அவர், ஆராய்ச்சி இயக்குநராகவோ அல்லது துணை முதன்மை பொறியாளராகவோ பணி வாய்ப்புகளைப் பெறலாம்.இத்துறை நிபுணர்களுக்கு, டெலிகம்யூனிகேஷன் நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. ஆப்டிகல் தொடர்பான பொருட்கள் மற்றும் சிஸ்டம்களை சப்ளை செய்யும் நிறுவனங்களில், வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் போட்டோனிக்ஸ் அம்சங்களை சோதனை செய்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள நபர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.
* போட்டோனிக்ஸ் சர்வதேச கல்வி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கொச்சின் பல்கலைக்கழகம், கொச்சின்.
* ஐ.ஐ.டி., சென்னை.
* மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மணிப்பால்
* ஐ.ஐ.டி., டில்லி
* பெரியார் ஈ.வெ.ரா., கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
* ராஜரிஷி சாகு மகாவித்யாலயா, போட்டோனிக்ஸ் துறை, லத்தூர்.
* பெரியார் ஈ.வெ.ரா., கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
* ராஜரிஷி சாகு மகாவித்யாலயா, போட்டோனிக்ஸ் துறை, லத்தூர்.
Subscribe to:
Posts (Atom)