போட்டித் தேர்வு நடத்தி, 2,176 டாக்டர்களை புதிதாக தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, செப்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பல மருத்துவமனைகளிலும், டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் 34 பல் டாக்டர்கள் உட்பட 2,176 டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.போட்டித் தேர்வு மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளோர், செப்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.போட்டித் தேர்வு, செப்., 28ம் தேதி நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், &'www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
அரசு மற்றும் தனியார் பி.எட்., கல்வி நிலையங்களுக்கு, நீதிபதி பாலசுப்ரமணியன் கமிஷன், கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, அரசு கல்லூரிகளுக்கு 2,050; அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 10 ஆயிரம்; தனியார் கல்லூரிகளுக்கு 41,500; தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளுக்கு 46 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேல், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் ஓராண்டு பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்த, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. இதுவரை முடிவு வெளியாகவில்லை என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.
இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது.
இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது.டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக தேர்வர்கள் தரப்பில் இருந்து குறைகளை பெற்று நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும் குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி நிவாரணம் பெறலாம்.சான்றிதழ் சரிபார்ப்பு: இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.குறைதீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
Subscribe to:
Posts (Atom)