தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையில் உள்ள தேர்வுத்துறையில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு, 25 வகையான தொழில் நுட்ப தேர்வுகள் உட்பட ஆண்டு தோறும் 42 வகையான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் ஆண்டுதோறும் 35 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த தேர்வுத்துறையில் அதிகாரிகள் நிலையில் 30 பணியிடங்களும், 800 பணியாளர்களின் பணியிடங்களும் உள்ளன. இதில் ஏழு மண்டல செயலாளர்கள், மூன்று துணை இயக்குனர்கள், இரண்டு கூடுதல் செயலாளர்கள் உட்பட 20 அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் உட்பட 200 பணியாளர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன.இவ்வளவு அதிகாரிகள், பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தேர்வு முடிவு களை வெளியிடுவதில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் புதுடெல்லி சார்பாக நடைபெறும் தொழில் முனைவோர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் - 25.08.2014


பொறியியல் கல்லூரிகளில் துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


தேர்விற்கான விண்ணப்பம் 28.8.14 முதல் 05.09.14 தேதி வரை வழங்கப்படும். தேர்வு நடைபெறும் நாள் 26.10.14 என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.