சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டி.இ.டி., - ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், அனைத்துப் பாடங்களுக்கும் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,யான ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே வெளியிட்டது. இதில், தேர்வுபெற்ற 12,500 பேர் ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டனர்.
ஆனால் கன்னடம், தெலுங்கு, உருது, மலையாளம் ஆகிய நான்கு சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு, நான்கு சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம்,www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது.
பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சென்னை, கோவை மாநகராட்சிகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கு, தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு பெற்றவர்களின் பட்டியல், சம்பந்தபட்ட துறைகளுக்கு, ஓரிரு நாளில் ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும். அதன்பின், அந்தந்த துறைகள் பணி நியமன உத்தரவை வழங்கும். மொத்தத்தில் 1,000 ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வுசெய்து வருகிறது. குஜராத் மாநில அரசின், முன்னாள் தலைமை செயலர், மான்காட், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த, ரங்கராஜன், உலக வங்கி சார்பில், அமெரிக்காவைச் சேர்ந்த, மூனா ஆகியோர், அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில், மத்திய குழு ஆய்வு செய்தது. நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகில் உள்ள ஓங்கூர் தொடக்கப் பள்ளி, சாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சாரத்தில் உள்ள வட்டார வள மைய பயிற்சி மையம் உட்பட பல இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
அனைவருக்கும் கல்வி இயக்குனரக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய குழுவுடன் பார்வையிட்டு வருகின்றனர். இன்றும், விழுப்புரம் மாவட்டத்தில், பல அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ரங்கராஜன் கூறுகையில், &'&'பள்ளிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்; தற்போதைக்கு எதுவும் கூற முடியாது,&'&' என்றார்.
இணை இயக்குனர் நாகராஜ முருகன் கூறுகையில், &'&'மாணவர்களின் வாசிப்புத் திறன், ஒட்டுமொத்த கல்வித்தரம், பள்ளிகளில் உள்ள வசதிகள், ஆசிரியரின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர். இதுவரை பார்வையிட்ட பள்ளிகளில், மத்திய குழுவினர் எவ்வித குறையையும் தெரிவிக்கவில்லை" என்றார்.

Online Applications are invited for Junior Engineering Assistant and Junior Quality Control Analyst Posts in Indian Oil Corporation Ltd (IOCL) Panipat Refinery and Petrochemical Complex


Indian Oil Corporation Ltd (IOCL)

Online Applications are invited for Junior Engineering Assistant  and Junior Quality Control Analyst Posts in Indian Oil Corporation Ltd (IOCL) Panipat Refinery and Petrochemical Complex

Advertisement No.
Advertisement date 27.09.2014
Last date Online 11.10.2014
Exam date Nov / Dec 2014
Posts :
Junior Engineering Assistant - 65 Posts - IDA 11900
Junior Quality Control Analyst - 9 Posts - IDA 11900
Notification http://www.panipatrefinery.in/IOCL_RECRUITMENT/Advertisement.pdf
Online Application Form http://www.panipatrefinery.in/IOCL_RECRUITMENT/default.aspx