தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக இசை அமைப்பாளர் தேவா நியமனம் தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அமைப்பு விதிகளின்படி, அந்த மன்றத்தின் தலைவராக தேவா மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்படுகிறார். இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய உறுப்பினர் செயலாளராக சித்ரா விஸ்வேஸ்வரனை மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.

சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் PRIDE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சேலம் பெரியார் பல்கலைழகத்தின் PRIDE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை pu-pride.in  என்ற இணையதளத்தில் காணலாம்.

பிஎட் ஆசிரியர் கல்வியியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

பிஎட்  ஆசிரியர் கல்வியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 தமிழகத்தில் உள்ள 21 இடங்களில் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு  இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சென்னை மதுரை கோவை சேலம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.