கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர்கள் சேர்க்கையை நடத்தும்படி, சில பள்ளிகளுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தவே மற்றும் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது: மருத்துவ கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கே மவுசு அதிகம் உள்ளது.அங்கு சேரவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தனியார் கல்லூரிகள் எல்லாம் வர்த்தக நோக்கத்தில் செயல்படுகின்றன. அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகள், சிறப்பாக செயல்பட முடிகின்றன என்றால், ஏன் சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் உருவாக்க முடியாது. சிறந்த ஆரம்ப பள்ளிகளை, அதிக அளவில் கொண்டிருக்க வேண்டியது அரசின் கடமை.எனவே, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் குவிவதைத் தடுக்க, சிறந்த ஆரம்ப பள்ளிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.நடப்பு கல்வி ஆண்டில், 14,749 பேர் இந்த வசதியை பெறுகின்றனர். தனியார் பள்ளிகள், மலைவாழ் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி குறித்து, சிந்திப்பது கூட கிடையாது. போதிய சாலை வசதி இல்லாத, அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள, சின்ன சின்ன கிராமங்களில் வாழும் குழந்தைகள், கல்வி பயில வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.மலைப்பிரதேச பகுதிகளில் உள்ள சிறுவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதில் உள்ள பிரச்னைகளை அறிந்த தமிழக அரசு, மாணவர்கள், பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதிபடுத்தும் வகையில், வாகன வசதி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.19 மாவட்டங்கள்: இந்த திட்டத்தால், கடந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர். நடப்பு கல்வி ஆண்டில், கோவை, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், நாகை, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் 1,287 சிறு சிறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்த கிராமங்களில் வசிக்கும் 14,749 குழந்தைகள், எந்த பிரச்னையும் இன்றி, வாகனங்களில் பள்ளி சென்றுவர, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் ஏற்பாடு செய்துள்ளது.மலை பகுதிகளில் உள்ள கிராமங்களும், பள்ளிகளும், அருகருகே உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில் 473 ஆரம்பப் பள்ளிகளும், 182 அரசு நடுநிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான படிப்பிற்கு, இந்த அரசு பள்ளிகளை நம்பித் தான் மலைவாழ் பகுதி மாணவர்கள் உள்ளனர்.இவர்கள், உரிய பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு சென்றுவர வேண்டும் என்பதற்காக, அந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் மூலம் பள்ளி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக, தேவையான மாணவர்களுக்கு பாதுகாப்பாக, உடன் ஒருவர் செல்லவும், தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக, பாதுகாவலர்களுக்கு மாதம் 250 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது..4.42 கோடி நிதி: மாணவர்களின் வாகன செலவுக்காக, ஒரு ஆண்டுக்கு தலா 3,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில், 4.42 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் இருந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம வாரியாக, மாணவர் எண்ணிக்கை வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரம் தற்போது அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, மத்திய அரசுக்கு அனுப்பி, உரிய நிதி பெறப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், வாகன வசதி, பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 9,595 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் செலவில், வாகன வசதி மற்றும் பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 23 அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இதில், டிப்ளமோ நர்சிங் இரண்டாண்டு படிப்புக்கு 2,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 8,101 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தர வரிசைப் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 15ம் தேதி தொடங்குகிறது. அன்று, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.தொடர்ந்து 18ம் தேதி வரை, பிற பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)