எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பில் மற்றும் பி.எச்டி, படிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகையாக இது வழங்கப்படுகிறது. எம்.பில் படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.16 ஆயிரமும், பி.எச்டி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். மேலும், கல்வி உதவித் தொகையாக கலை, அறிவியல் சம்பந்தப்பட்ட எம்.பில் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கும், பி.எச்டி படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கும் உதவித் தொகையாக பெறலாம். இதேபோல், அறிவியல், பொறியியல் சம்பந்தபட்ட படிப்புகள் எனில் முதல் 2 ஆண்டுகளுக்கு ரூ.12 ஆயிரமும், எஞ்சிய 3 ஆண்டுக்கு ரூ.25 ஆயிரமும் கிடைக்கும். நடப்பு நிதி ஆண்டுக்கான(2014-2015) கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்க்கு ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த உதவித் தொகைகளைப் பெறுவதற்கு யூ.ஜி.சி ( UGC) யின் இணையதளத்தில் (www.ugc.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.