தமிழக அரசு அனுமதியின்றி, பிசியோதெரபி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுவதை தடைசெய்ய வேண்டும் என, தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.மன்ற நிர்வாகிகள், பிசியோதெரபி தினத்தையொட்டி (செப்., 8), 29 கலெக்டர் அலுவலகங்களிலும், முதல்வர் அலுவலகத்திலும், கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும். தமிழக அரசு அனுமதி இல்லாமல், பிசியோதெரபி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்றன; இதை தடை செய்ய வேண்டும்.மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளில், ஏற்கனவே உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுடன், பெருகி வரும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.