இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு, பல்வேறு அரசுத் துறைகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்வதற்கான திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்திற்கு MHRD Internship Scheme - 2014 என்று பெயர். கல்வி, சமூக அறிவியல், அறிவியல், மானுடவியல், மேலாண்மை, பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் இளநிலை அல்லது முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வருவோர், இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முதல் batch, வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. முதல் batch -ல், வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள், மனிதவள அமைச்சகத்துடன் 2 மாதங்கள், நெருங்கி பணியாற்றும் வாய்ப்பினை பெறுகிறார்கள் மற்றும் அந்த காலகட்டத்தில், அவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர், இடைநிலை ஆசிரியர்கள், உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) கடைசி நாள் என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர், இடைநிலை ஆசிரியர்கள், உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) கடைசி நாள் என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.கள்ளர் சீரமைப்பு துறையில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள் -1 ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர் பிரிவில் உள்ள இந்து பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்பு பணி இன்றுடன் (ஆக. 12) முடிவடைகிறது. உரிய சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.,-ல் இள நிலை இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள 157 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


எரிசக்தி துறையில் பிரபலமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்.எல்.சி., என்ற பெயரால் நம்மால் அறியப்படுகிறது. பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி., தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் இள நிலை இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள 157 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.08.2014 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: மைனிங் அல்லது மைனிங் அண்டு சர்வேயிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.300/-ஐ ஆன்-லைன் முறையில் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.09.2014
இணையதள முகவரி: www.nlcindia.com