"பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்" என கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்

"பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்" என கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக, தமிழக அரசு, கட்டண நிர்ணய குழுவை அமைத்துள்ளது. இக்குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயிக்கிறது.கடந்த, 2012 - 13ல் இருந்து, நடப்பு கல்வி ஆண்டுடன், மூன்று ஆண்டை நிறைவு செய்யும் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய, கட்டண நிர்ணய குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு நிருபர்களிடம் கூறியதாவது:பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு, 2015 - 16, 16 - 17, 17 - 18 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணி விரைவில் துவங்கும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 பள்ளிகள், குழு நிர்ணயித்தகட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்ததாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். பெற்றோர் - பள்ளி நிர்வாகம் இடையே அதிக கட்டணம் வசூலிப்பு தொடர்பாக நடந்த உரையாடலை அவர்களுக்கு தெரியாமல் ஒருவர், வீடியோ எடுத்து அதை சிடி -யாக, குழுவிடம் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து, விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிங்காரவேலு தெரிவித்தார்.1.5 கோடி திருப்பி தர உத்தரவு : குழு நிர்ணயம் கட்டணத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள்வசூலிப்பதில்லை. கூடுதல் கட்டணத்தைதான் வசூலிக்கின்றன. இதில், ஒரு சில பள்ளிகள் மீதுதான் எழுத்துப்பூர்வமாக, குழுவிற்கு புகார் வருகின்றன. இந்த புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி, அதிக கட்டணம் வசூலித்தது நிருபணமானால், கூடுதல் கட்டணத்தை திருப்பி தரவும் குழு உத்தரவிடுகிறது.அதன்படி சென்னை, பெரம்பூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து, குழுவிற்கு புகார் வந்தது. விசாரணையில், புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம், கூடுதலாக வசூலித்த 1.5 கோடி ரூபாயை, உடனடியாக திருப்பி தர வேண்டும் என சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார்.

மை ஷேர் அமைப்பின் சார்பாக பொதுமக்களிடம் இருந்து பார்வையற்ற மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை சேகரிக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள சிவன் கோவில் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

மை ஷேர் அமைப்பின் சார்பாக பொதுமக்களிடம் இருந்து பார்வையற்ற மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை சேகரிக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள சிவன் கோவில் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஞாநி, மை ஷேர் அமைப்பின் தலைவர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற புத்தக சேமிப்பு நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு, தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை பார்வையற்ற மாணவர்களுக்காக வழங்கினர்.
இது குறித்து மை ஷேர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரமிளா ஹரி கூறும்போது, “இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது தவிர பொது அறிவு, நாவல், கணினி , பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் பெறப்பட்டுள்ளன” என்றார்.
மை ஷேர் அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. பின்னர் பார்வையற்ற அமைப்புகளில் உள்ள மாணவர் களை வரவழைத்து தினமும் மாலை நேரத்தில் கல்லூரி மாணவர்களால் அதிலுள்ள பாடங்கள் படித்துக் காட்டப்பட உள்ளன.

தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையில் உள்ள தேர்வுத்துறையில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு, 25 வகையான தொழில் நுட்ப தேர்வுகள் உட்பட ஆண்டு தோறும் 42 வகையான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் ஆண்டுதோறும் 35 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த தேர்வுத்துறையில் அதிகாரிகள் நிலையில் 30 பணியிடங்களும், 800 பணியாளர்களின் பணியிடங்களும் உள்ளன. இதில் ஏழு மண்டல செயலாளர்கள், மூன்று துணை இயக்குனர்கள், இரண்டு கூடுதல் செயலாளர்கள் உட்பட 20 அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் உட்பட 200 பணியாளர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன.இவ்வளவு அதிகாரிகள், பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தேர்வு முடிவு களை வெளியிடுவதில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.