இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும் எல்.கே.ஜி. முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை ஆர்.டி.இ. இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டும் என்பது சட்டம். இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது.2013 14ல் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம் 35 கோடி ரூபாயை பள்ளிகளுக்கு வழங்காததால் நடப்பு கல்வி ஆண்டில் ஆர்.டி.இ. பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி நிர்வாகிகள் முரண்டு பிடித்தனர். பின் அதிகாரிகள், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளிடம் பேசி நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.அதன்பின், மாணவர் சேர்க்கை துவங்கியது. கடந்த மே மாதம் முதல் நேற்று வரை 89,382 மாணவர்கள் ஆர்.டி.இ. இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 49,864 பேர் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 39,518 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.இவர்களுக்கான நிதி சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும், கடந்த ஆண்டுக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து விரைவில் கிடைக்கும் எனவும் கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.ஆர்.டி.இ. பிரிவின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இதில் 89,382 இடங்களே நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு துறை வாரியாக சேர்ந்த மாணவர் விவரம் துறை - பள்ளி எண்ணிக்கை - சேர்ந்த மாணவர் பள்ளி கல்வித்துறை - 369 - 2,959 தொடக்க கல்வித்துறை - 441 - 43,837 மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் - 3,642 - 42,586 மொத்தம் - 9,452 - 89,382
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர் 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர் 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர் 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர் 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில் தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணையை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வுபெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால் பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதன்பின் தற்போதுதான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில் நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது: இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 28ம் தேதிக்குள், 2,000 பேரின் தேர்வு பட்டியல், www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
பல்கலைகளை ஆய்வுக்களமாக மாற்ற வேண்டும் என, துணைவேந்தர்களிடம், கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தினார்
பல்கலைகளை ஆய்வுக்களமாக மாற்ற வேண்டும் என, துணைவேந்தர்களிடம், கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தினார்.தமிழகத்தில் உள்ள 20 துணைவேந்தர்கள் பங்கேற்ற கருத்தரங்கம், சென்னை ராஜ்பவனில், பல்கலைகளின் வேந்தரான கவர்னர் ரோசய்யா தலைமையில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, கவர்னர் ரோசய்யா பேசியதாவது:உயர்கல்வியில் தேவையான மாற்றங்களை கொண்டு வர, தீவிர யோசனைகள் தற்போது நடக்கின்றன. சமீபத்தில், லண்டன், டைம்ஸ் பத்திரிகையின் உயர்கல்வி இதழ் வெளியிட்ட உலகளவில் சிறந்த 200 பல்கலைகளில், நம் நாட்டை சேர்ந்த ஒரு பல்கலைக்கூட இடம் பெறாதது கவலை அளிக்கிறது.பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும், கூடுதலாக சிறிய முயற்சி எடுத்து, இளைஞர்களை நேர்வழிப்படுத்தினாலே, சிறந்தவர்களாக உருவாக்கலாம். உள்ளூர் தேவைகள் அடிப்படையில், பாடத்திட்டங்களின் கட்டமைப்பை மாற்றி மறுவரையறை செய்ய வேண்டும்.பல்கலைக்கழகங்களை, ஆய்வுக்களமாக மாற்றுவதை, தாரக மந்திரமாக துணைவேந்தர்கள் கொள்ள வேண்டும். இளைஞர்களை அவர்கள் விரும்பும் துறையில் முன்னேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)