கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

 கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இதற்கான முடிவுகள் வெளியான பின், ஜூனில் உடனடி மறுதேர்வு நடந்தது. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அடுத்த மாதமே இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மதிப்பெண் பட்டியல்களும் வழங்கப்பட்டன. ஆனால் 7 ஆயிரம் பேருக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.
முடிவுகள் தாமதமானதும் பலர் தேர்வுத் துறையிடம் விளக்கம் கேட்டனர். ஆயிரம் பேருக்கு மட்டும் அதிகாரிகள் முடிவுகளை வெளியிட்டனர். ஆனால், மற்றவர்களுக்கான முடிவுகள் தெரியாத நிலையில் அவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத நிலையுள்ளது. சேர்க்கை முடிந்தநிலையில், ஓராண்டு படிப்பு வீணாகிவிட்டதாக புலம்புகின்றனர்.
கல்வித்துறையினர் கூறுகையில், ‘இந்தாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்காக, ’பார்கோடு’ முறை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் ’சாப்ட்வேர்’ பிரச்னையால் முடிவுகள் அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது,‘ என்றனர்.

தமிழகத்தில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர், உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர், உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி உதவி சூப்பிரண்டு
* நெல்லையில் பயிற்சி முடித்த அருண் சக்திகுமார், தூத்துக்குடி டவுண் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மதுரையில் பயிற்சியை நிறைவு செய்த தேஷ்முக்சேகர் சஞ்சய், தர்மபுரி மாவட்டம் அரூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
* திருச்சியில் பயிற்சியை முடித்துள்ள ஜார்ஜி ஜார்ஜ், காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சையில் பயிற்சி பெற்ற ஓம்பிரகாஷ் மீனா, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உதவி சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
ரோகிணி பிரியதர்ஷினி
* சிவகங்கையில் பயிற்சியை முடித்துள்ள ரோகிணி பிரியதர்ஷினி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காஞ்சீபுரத்தில் பயிற்சி பெற்ற விக்ரந்த் பட்டீல், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
* நாகப்பட்டினத்தில் பயிற்சி பெற்றுள்ள தீபாகனீகர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதவி சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திண்டுக்கல்லில் பயிற்சியை முடித்துள்ள சஷாங்க்சாய், நாகப்பட்டினம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியர்கள் 29 பேர் கல்லூரி முதல்வர் கிரேடு–2 நிலைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள்.


அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியர்கள் 29 பேர் கல்லூரி முதல்வர் கிரேடு–2 நிலைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள். அவர்கள் பெயர்களும், பதவி ஏற்க உள்ள அரசு கல்லூரிகள் உள்ள ஊர்களின் விவரமும் வருமாறு:–
1. எஸ்.லீலாவதி–பரமக்குடி, 2. வி.பிரபாகரன்–மேலூர், 3. கே.சுந்தரவல்லி–கொமரப்பாளையம், 4. சி.வடிவேலு –முதுகுளத்தூர், 5. உஷாயலயராஜ்–வேலூர், 6. ஏ.ஜோசப் துரை–ராமநாதபுரம், 7. எல்.ஞானசேகரன்–கரம்பக்குடி, 8. எஸ்.சசிகலா–சென்னை வியாசர்பாடி, 9. ஆர்.பாண்டியன்–கோவில்பட்டி, 10. எஸ்.சுரேஷ்–சிவகாசி. 11. தாராபாய் தாட்சாயணி–ராமநாதபுரம் பெண்கள் கல்லூரி, 12. எஸ்.எஸ்.ரத்தினகுமார்–கடலாடி, 13. ஆர்.முர்த்தி–உத்திரமேரூர், 14. எம்.எம்.செந்தமிழ்ச்செல்வி–குளித்தலை, 15. கே.கூடலிங்கம்–முசிறி, 16. அமுதா ராணி–பூலாங்குறிச்சி, 17. ஜி.வணங்காமுடி–சிதம்பரம், 18. என்.ராஜ சுலோசனா–ஆத்தூர், 19. ஏ.சுப்பையா பாண்டி–புதுக்கோட்டை, 20. டி.ஆர்.கணேசன்–ராசிபுரம், 21. கே.சண்முக சுந்தரம்–காங்கேயம், 22. கே.சித்ரா–சுரண்டை, 23. என்.ராமகிருஷ்ணன்–கோவை, 24. எல்.பிரதாபன்–பர்கூர், 25. ஆர்.நடராஜன்–காரிமங்கலம், 26. பெர்னிஸ் பென்னட்– நிலக்கோட்டை, 27. எம்.லதா–திருவாடாணை, 28. வி.ராதா–நாமக்கல், 29. எம்.ஆர்.ஜெயசக்தி–கிருஷ்ணகிரி.இந்த தகவலை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.