தமிழக அரசின் ஆணை எண் : 92 ( தேதி : 11.09.2012 ) படி, +2 வகுப்புக்கு பின் உயர் படிப்புகளில் சேருகிற ஆதிதிராவிடர்கள், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்க்ள், பழங்குடிகள் சேரந்த மாணவ-மாணவிகளுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய அரசின் கல்வி உதவித் தொகைத் திட்டம் மூலம் தமிழக அரசே 2011-2012 கல்வியாண்டு முதல் வழங்குகின்றது. இந்த உதவித் தொகையை பெற,மாணவர்களின் குடும்ப வருமானம் 200000 -க்கு குறைவாக இருக்க வேண்டும். தமிழக அரசின் இணையதளத்தில் தமிழ் வடிவில் இந்த ஆணையை டவுன்லோடு செய்துகொள்ளலாம்
எஸ்.சி., எஸ்.டி., மாணவர் முதுகலைத் தொழில்படிப்பு உதவித் தொகைத் திட்டம்.
எம்.இ, எம்.டெக்., உள்ளிட்ட முதுகலைத் தொழில்படிப்புகள் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கபடுகிறது. எம்.இ, எம்.டெக், படிப்புகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரமும்,இதர படிப்புகளுக்கு ரூ.3 ஆயிரமும் கிடைக்கும். மேலும் அவசர நிதி உதவியாக பொறியியல் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், இதர படிப்புகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகைத் திட்டத்தின் வயது வரம்பு ஆண்களுக்கு 45, பெண்களுக்கு 50. ஆண்டுதோறும் 1000 எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இந்த உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.நடப்பு நிதி ஆண்டுக்கான(2014-2015) கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்க்கு ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த உதவித் தொகைகளைப் பெறுவதற்கு யூ.ஜி.சி (UGC) யின் இணையதளத்தில் (www.ugc.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ராஜிவ்காந்தி தேசிய எஸ்.சி., எஸ்.டி., மாணவர் உதவித் தொகைத் திட்டம்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பில் மற்றும் பி.எச்டி, படிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகையாக இது வழங்கப்படுகிறது. எம்.பில் படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.16 ஆயிரமும், பி.எச்டி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். மேலும், கல்வி உதவித் தொகையாக கலை, அறிவியல் சம்பந்தப்பட்ட எம்.பில் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கும், பி.எச்டி படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கும் உதவித் தொகையாக பெறலாம். இதேபோல், அறிவியல், பொறியியல் சம்பந்தபட்ட படிப்புகள் எனில் முதல் 2 ஆண்டுகளுக்கு ரூ.12 ஆயிரமும், எஞ்சிய 3 ஆண்டுக்கு ரூ.25 ஆயிரமும் கிடைக்கும். நடப்பு நிதி ஆண்டுக்கான(2014-2015) கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்க்கு ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த உதவித் தொகைகளைப் பெறுவதற்கு யூ.ஜி.சி ( UGC) யின் இணையதளத்தில் (www.ugc.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)