இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, இன்று முதல், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடக்கிறது. தமிழ்நாடு மீன்வள பல்கலை சார்பில், இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று காலை 9:00 மணி முதல் துவங்குகிறது.இதற்கான, பல்கலை நிர்ணயித்த கட் - ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மீன்வளப் பல்கலையின், www.tnfu.org.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்கள், கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.அழைப்புக் கடிதம் கிடைக்காவிட்டாலும், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்தால், தக்க சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கு பெறலாம்.