எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டால், இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புகளில் பொதுப்பிரிவினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, அக்ஷயா, ஹரிணி உள்ளிட்ட 4 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், தற்போதைய நிலையில், இந்த வழக்கை அரசியல் சாசன பிரிவுக்கு மாற்ற முடியாது என்றும், இதுகுறித்து மாணவர்கள் 2 வாரத்திற்குள்ளாகவும், தமிழக அரசு 4 வாரத்திற்குள்ளாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.