கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு ஆடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதி சான்றிதழ் வழங்கப்படாது என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.
கேரளா மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அம்மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பள்ளிகளில் கட்டாய கழிப்பறை வசதியை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பள்ளியின் கட்டங்களின் பாதுகாப்பை அறிந்து இதுவரையில் பள்ளிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். கழிவறை வசதியும் அதில் கட்டாயமாக்கப்படும். இத்தகையை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அடுத்து கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படாது. இதுவரையில் 196 அரசு பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. அடுத்த 100 நாட்களில் அத்தகைய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இதேபோல் மாநிலத்தில் 1011 அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. அடுத்த கல்வி ஆண்டுக்குள் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கழிவறை வசதிகளை சொந்த செலவில் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார்.