உலக நாடுகள் தங்களை வளர்த்து கொள்ள கடனுதவிகளை உலக வங்கி அளித்து வருகிறது. குறிப்பாக ஏழை நாடுகள் தங்களை வளப்படுத்தி கொள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடன் உதவி திட்டங்களை அளித்து வருகிறது. உலக வங்கி மற்ற வங்கிகளை போல செயல்படுவதில்லை. வணிக நோக்கத்தை தவிர்த்து வறுமையை குறைப்பதையும், வளர்ச்சியை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.


உலக நாடுகள் தங்களை வளர்த்து கொள்ள கடனுதவிகளை உலக வங்கி அளித்து வருகிறது. குறிப்பாக ஏழை நாடுகள் தங்களை வளப்படுத்தி கொள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடன் உதவி திட்டங்களை அளித்து வருகிறது. உலக வங்கி மற்ற வங்கிகளை போல செயல்படுவதில்லை. வணிக நோக்கத்தை தவிர்த்து வறுமையை குறைப்பதையும், வளர்ச்சியை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
* பணிவாய்ப்புகள்:
ஜூனியர் புரொபசனல் அசோசியேட், தொழில் நுட்பவியலாளர்கள், ஒப்பந்த ஆலோசனைதாரர் போன்று பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்தும் பணியாளர்கள் பணி செய்கிறார்கள். குறிப்பாக நீர், விவசாயம் மற்றும் கட்டுமான துறை சார்ந்த வல்லுநர்களுக்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.
* தேர்ந்தெடுக்கும் முறை:
சில குறிப்பிட்ட பதவிகளுக்கு உலக வங்கி நிறுவனமே தனிப்பட்ட முறையில் ஆட்களை பணி அமர்த்துகிறது. அவை தவிர பெரும்பாலான வேலைகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இந்த பணியில் சேர விரும்புவர்கள் அதிகம் பயணம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
* ஊதியம்:
நாம் எந்த மாதிரியான ஒப்பந்தத்தில் கையெழுத்து செய்திருக்கிறோமோ அதன்படி ஊதியம் வழங்கப்படும். மேலும், அனுபவம், தகுதி ஆகியவற்றை பொருத்தும் ஊதியம் மாறுபடும். ஒப்பந்த காலத்திற்கு ஏற்றவாறு தினசரி அல்லது மாத சம்பளமாக வழங்கப்படும்.
* தகுதி:
பணிக்கு தகுந்தவாறு தகுதிகள் மாறுபடும். பொதுவான தகுதிகளாக ஆங்கில மொழித்திறன் சிறப்பாக இருக்க வேண்டும். கூடுதலாக அரபிக், சீனம், பிரெஞ்சு, போர்ச்சுகீசிய மொழி, ருஷ்ய மொழி, ஸ்பானிஸ் மொழிகளில் ஏதேனும் தெரிந்திருந்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
கல்வித் தகுதியை பொறுத்தவரையில் முதுநிலை பாடத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுநலம், சுகாதாரம், பொருளாதாரம், உணவு, சமூக அறிவியல் போன்றவற்றை ஆராய்ந்து முடிவுகளை எடுக்க கூடியவராக இருத்தல் வேண்டும். தகவல் பரிமாற்றங்கள் இணையம் வழியாக நடப்பதால் தொழில்நுட்பங்களை திறம்பட கையாள்பவராக இருத்தல் வேண்டும்.
* விண்ணப்பிக்கும் முறை:
உலக வங்கி ஆண்டுதோறும் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை கையாள்கிறது. எந்த பதவிகளுக்கு விளம்பரம் செய்திருந்தார்களோ அந்த பதவிக்கு மட்டுமே ஆட்களை தேர்வு செய்கிறார்கள். மேலும், உலக உலக வங்கி இணையதளம் மூலமாக அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள்.