எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டால், இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புகளில் பொதுப்பிரிவினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, அக்ஷயா, ஹரிணி உள்ளிட்ட 4 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், தற்போதைய நிலையில், இந்த வழக்கை அரசியல் சாசன பிரிவுக்கு மாற்ற முடியாது என்றும், இதுகுறித்து மாணவர்கள் 2 வாரத்திற்குள்ளாகவும், தமிழக அரசு 4 வாரத்திற்குள்ளாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, இன்று முதல், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடக்கிறது.
இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, இன்று முதல், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடக்கிறது. தமிழ்நாடு மீன்வள பல்கலை சார்பில், இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று காலை 9:00 மணி முதல் துவங்குகிறது.இதற்கான, பல்கலை நிர்ணயித்த கட் - ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மீன்வளப் பல்கலையின், www.tnfu.org.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்கள், கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.அழைப்புக் கடிதம் கிடைக்காவிட்டாலும், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்தால், தக்க சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கு பெறலாம்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக இசை அமைப்பாளர் தேவா நியமனம் தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அமைப்பு விதிகளின்படி, அந்த மன்றத்தின் தலைவராக தேவா மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்படுகிறார். இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய உறுப்பினர் செயலாளராக சித்ரா விஸ்வேஸ்வரனை மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.
Subscribe to:
Comments (Atom)
home