25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 
கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.  ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 
நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் . இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு,
நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.  உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்
வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் 
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 

இன்று காலை 9 மணிமுதல் , கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்

கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று காலை 9 மணிமுதல் சென்னையில் நடைபெறுகிறது. மொத்தம் 3 நாட்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 30ம் தேதி காலை 9 மணி முதல்:
BVSc & AH படிப்பில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங்
காலை 11 மணிமுதல்:
BVSc & AH படிப்பிற்கு, பள்ளிப் படிப்பில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கான கவுன்சிலிங். மாணவர்களின் இனப்பிரிவு கட்-ஆப் மதிப்பெண் வாரியாக இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 31ம் தேதி:
BVSc & AH படிப்புகளுக்கு, பள்ளி படிப்பில் அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங். இது முதல் batch கவுன்சிலிங் ஆகும். இங்கும், இனப்பிரிவுக்கேற்ற கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
மதியம் 2 மணிமுதல்: அதே அகடமிக் பிரிவு மாணவர்களுக்கு, BVSc & AH படிப்பிற்கான, இரண்டாம் batch கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி:
காலை 9 மணிக்கு:  பி.டெக்., உணவு தொழில்நுட்பம் மற்றும் பி.டெக்., கோழி வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
 காலை 11 மணிமுதல்: மேற்கூறிய இரண்டு படிப்புகளுக்கும், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடைபெறும்.
விரிவான விபரங்களை அறிய : http://www.tanuvas.tn.nic.in/ugadmission/counselling.html.

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.கல்வித்துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல் 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடுநிலை வகுப்புகளில், 2001 - 02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013 - 14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப, நடுநிலை வகுப்புகளில், மாணவர் சேர்க்கை 99 சதவீதமாக இருப்பதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது."மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகம், பாடப் புத்தகம், இலவச சைக்கிள், லேப் - டாப் உட்பட, 14 வகையான இலவச திட்டங்கள் வழங்கப்படுவதால், மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதன் காரணமாக, கிராமப்புறங்களில், பள்ளி இடைநிற்றல் அளவு கணிசமாக குறைந்துவிட்டது" என கல்வித் துறை வட்டாரம் கூறுகிறது.இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: இடைநிற்றல் குறித்தும், முழுமையான அளவில், அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும், கல்வித்துறை அல்லாத பிற அமைப்புகளிடம் முழுமையான புள்ளி விவரம் இருக்கிறதா என தெரியவில்லை.இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பது சரியாக இருக்கலாம். ஆனால், பள்ளி சேராத தெருவாழ் சிறார்கள், இன்றும் அதிகளவில் இருக்கின்றனர். சென்னையிலேயே பல குடிசை பகுதிகள் உள்ளன. அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர் என்பதை உறுதியாக கூற முடியாது.எனவே, தெருவாழ் சிறுவர்கள், குடிசை பகுதிகளில் வாழும் சிறுவர்கள் மற்றும் பிழைப்பிற்காக, ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆகிய அனைவரையும், ஆரம்பப் பள்ளிகளில் சேர்ப்பதை, கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும்.அத்துடன், அவர்கள், தொடர்ந்து கல்வி கற்பதையும் கண்காணிக்க வேண்டும். இதை செய்தால்தான், மாணவர் சேர்க்கையில் 100 சதவீதத்தை எட்ட முடியும். இவ்வாறு பிரின்ஸ் தெரிவித்தார்

தமிழகத்தில், சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளை(ஜுலை 30) முடிகிறது.

தமிழகத்தில், சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளை(ஜுலை 30) முடிகிறது.இதுவரை, 3,525 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். தமிழகத்தில், சென்னை, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் நாகர்கோவிலில் சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவம் சார்ந்த ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.சித்தா பி.எஸ்.எம்.எஸ்., ஆயுர்வேதம் பி.ஏ.எம்.எஸ்., யுனானி பி.யு.எம்.எஸ்., நேச்சுரோபதி மற்றும் யோகா பி.என்.ஓய்.எஸ்., மற்றும் ஓமியோபதி பி.எச்.எம்.எஸ்., படிப்புகளுக்கு 296 இடங்கள் உள்ளன. இதுதவிர, சுயநிதி கல்லூரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டுக்கு 900 இடங்கள் வரை கிடைக்கும். இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் 14ம் தேதி துவங்கியது.இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இதுவரை 3,525 பேர், விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதில், 2,510 விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், "விண்ணப்பங்கள் பெற, 30ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 31ம் தேதிக்குள் வர வேண்டும். முன்கூட்டியே விண்ணப்பித்து இருந்தாலும், தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

வெளிமாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறுவகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்

வெளிமாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறுவகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும் என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீடு: ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்த தமிழக மாணவர்கள், அம்மாநிலங்கள் வழங்கிய சான்றிதழை, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்திடம் சமர்ப்பித்து, மதிப்பீடு செய்ய வேண்டும்.இதன்பிறகே, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யவும், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வை எழுதவும் முடியும். இந்த வகையில், 2,000 பேர், தமிழக கல்வித் துறையிடம், மதிப்பீடு செய்ய காத்திருக்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், வெளி மாநிலங்கள் வழங்கிய, ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்(டி.சி.,), கோர்ஸ் சர்ட்டிபிகேட் ஆகியவற்றின் நகல்களை, விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டும்.மேலும், 500 ரூபாய் டிடி மற்றும் வெளிமாநில ஆசிரியர் கல்வித் துறை செயலர் பெயரில், 300 ரூபாய்க்கு, டிடி ஆகியவற்றுடன், இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் தெரிவித்தது

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் தெரிவித்தது.வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என, ஏற்கனவே டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது. இதற்கு, ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள் ஆவலுடன் உள்ளனர்.இதுகுறித்து டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி பணி முடிந்தால், வரும் 30ம் தேதி 10,700 ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியாகும்.பணி முடிய சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். எப்படியும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.பல்வேறு சிக்கல்கள் - விடிவு கிடைக்குமா?தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே இனிமேல் ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று தமிழகத்தில் 2011ம் ஆண்டில் பொறுப்பேற்ற புதிய அரசு அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே பல்வேறு குளறுபடிகளும், சிக்கல்களும் ஏற்பட்டன. 2012ம் ஆண்டுகளில் நடைபெற்ற 2 தகுதித் தேர்வுகளில் பெரிதாக சிக்கல் எழவில்லை. தேர்ச்சி பெற்றவர்கள், உடனடியாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.ஆனால், 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுக்குப் பிறகுதான் சிக்கல்கள் ஏற்பட்டன. பல்வேறு மாநிலங்களிலும், தேர்வு மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்படும் நிலையில், இடஒதுக்கீட்டின் தாயகமாய் திகழ்ந்து, இந்தியாவிலேயே அதிகளவான 69% இடஒதுக்கீடு வழங்கிவரும் தமிழகத்தில், மதிப்பெண் சலுகை இல்லையா? என்ற குமுறல்கள் எழுந்தன. குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையில், பார்வையற்றவர்களுக்குக் கூட மதிப்பெண் சலுகை வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகள் கடுமையான போராட்டங்களை தெருவில் இறங்கி நடத்தினார்கள்.மேலும், மதிப்பெண் சலுகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, பலர், நீதிமன்றங்களில் வழக்குத் தொடந்தனர். மதிப்பெண் சலுகைப் பிரச்சினை தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு சென்றது.அப்போதுதான், அந்த எச்சரிக்கை வந்தது. தமிழகத்தின் சமூகநீதி போராட்டம் பற்றிய அறிவே இல்லாமல் செயல்படும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கையை அந்த ஆணையம் விடுத்தது. "மதிப்பெண் சலுகை வழங்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆணையம் எச்சரித்தது. அதன்பிறகுதான் அரசு இறங்கி வந்தது.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அறிவிப்பு வெளியானது. அதன்பிறகும் பிரச்சினை ஓயவில்லை. தவறான வெயிட்டேஜ் முறையின் மூலம், மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இதை எதிர்த்தும் பலர் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினார்கள். எனவே, உயர்நீதிமன்றம், அறிவுக்குப் பொருந்தும் வகையில் வெயிட்டேஜ் முறையை பின்பற்றும்படி, அரசுக்கு அறிவுரை வழங்கியது. இதனையடுத்து, புதிய வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது.ஆனாலும், குமுறல்கள் அடங்கவில்லை. இன்று வாங்கும் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. எனவே, வெறுமனே மதிப்பெண்களை மட்டும் பார்க்காமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து, அதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டது.ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசின் நடைமுறைகளால், தேவைக்கு அதிகமான தகுதிகளைக் கொண்டிருந்தும், பல ஆசிரிய பட்டதாரிகள், சரியான காலத்தில் பணி கிடைக்காமல் நொந்து நூலாகியுள்ளனர். புதிதாக படிப்பை முடித்து, பெரிதாக எந்த அனுபவம் மற்றும் அறிமுகமும் இல்லாமல், பலர் பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படாதா? என்ற கேள்வியும் எழுகிறது. 

கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள், மூன்று மாதங்களில் வெளியிடப்படும்

"கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள், மூன்று மாதங்களில் வெளியிடப்படும்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நீர்வள ஆதாரத் துறை, பொதுப்பணித் துறைகளில், 98 உதவி பொறியாளர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சென்னையில், 50 மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும், 176 மையங்களில் நடந்தது.காலையில், துறைகள் சார்ந்த (விருப்ப பாடம்) எழுத்து தேர்வும், மதியம், பொது அறிவுக்கான தேர்வுகளும் நடந்தன. 98 இடங்களுக்கு, 53 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.சென்னையில், தேர்வு நடந்த மையங்களை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் (பொறுப்பு) ஆய்வு செய்தார். பின் நிருபர்களிடம் கூறுகையில், &'&'இரண்டு தேர்வுகளிலும், விண்ணப்பதாரர் பெறும் மொத்த மதிப்பெண் அடிப்படையில், நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள், மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும்" என்றார்.

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பிளஸ் 2 முடித்து, இரண்டாண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த நிலையில், பணியில் நியமிக்கப்படுகின்றனர்.இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற, பி.எட்., படிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு, பட்டப்படிப்பு முடித்த நிலையில், பி.எட்., படிப்பை தபால் வழியில் அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட பல்கலை வழங்குகின்றன. இதில், 40 நாள் வகுப்பறை பயிற்சியும் அவசியம். இதற்காக அரை நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இடைநிலை ஆசிரியர் களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி வழங்க வேண்டும். இக்கல்வியாண்டில், இதுவரை எந்த ஆசிரியருக்கும் அனுமதி வழங்காமல், மறுத்து வருவதாகவும், இதனால், தங்களது பதவி உயர்வுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து தொடக்கக்கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: கல்வியாண்டு துவக்கத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட முக்கிய பணி உள்ளன. அதுமட்டுமில்லாமல், ஈராசிரியர் பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 நாள் வரை விடுப்பில் செல்லும் பட்சத்தில், அங்கு கற்றல் பணி பாதிக்காமல் இருக்க மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்க வேண்டும். கல்வியாண்டின் துவக்கத்தில் இதுபோன்ற சிக்கல் வரும் பட்சத்தில், மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க ஒரு சில அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் முதல், அனைத்து பி.எட்., படிக்கும் ஆசிரியர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாடு தழுவிய அளவில் 930 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவிகள் காலியாக உள்ளன.

 நாடு தழுவிய அளவில் 930 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவிகள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக, குற்றங்கள் அதிகமாக நடந்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் 105 பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதில் 2014-2015 கல்வியாண்டிற்கான முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதில் 2014-2015 கல்வியாண்டிற்கான முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு :
விண்ணப்பப்படிவம்  மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியவற்றை http://www.tanuvas.ac.in/  என்ற  பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பப்படிவம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 28.08.2014

சென்னை: அண்ணா பல்கலைக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நாக் (தேசிய தர நிர்ணய கவுன்சில்) குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பல்கலைக்கு ஏ கிரேடு அங்கீகாரம் கிடைக்குமா என்பது இம்மாத இறுதிக்குள் தெரியும். பல்கலை மற்றும் கல்லூரிகளை ஆய்வு செய்து அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் பாடத் திட்டம், கற்பித்தல் திறன், தகுதியான ஆசிரியர், ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல வகை அம்சங்களையும் குறிப்பெடுத்து ஒவ்வொன்றிற்கும் மதிப்பெண் அடிப்படையில் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகார சான்றிதழை நாக் அமைப்பு வழங்குகிறது.யு.ஜி.சி. (பல்கலை மானிய குழு) கீழ் இயங்கும் நாக் அமைப்பு உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து ஏ, பி, சி, டி என நான்கு வகைகளில் அங்கீகார சான்றிதழ் வழங்குகிறது. டி வகையில் வரும் கல்வி நிறுவனங்களை நாக் அங்கீகரிக்காது.இதர மூன்று பிரிவுகளில் வரும் கல்வி நிறுவனங்களை நாக் அங்கீகரித்து சான்றிதழ் வழங்குகிறது. நாக் அங்கீகாரம் பெற்றால் யு.ஜி.சி.யின் நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். இதனால் உயர்கல்வி நிறுவனங்கள் நாக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கின்றன.ஒரு முறை பெறும் அங்கீகாரம் ஐந்தாண்டுகள் வரை செல்லத்தக்கது. அண்ணா பல்கலைக்கு நாக் அமைப்பு ஏற்கனவே வழங்கிய ஏ கிரேடு அங்கீகாரம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எனவே அப்பல்கலை மீண்டும் விண்ணப்பித்ததன் அடிப்படையில் பாட்டின் என்பவர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் முதல் அண்ணா பல்கலையில் ஆய்வு செய்து வருகிறது.இது குறித்து அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: இரு முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் ஏழு உயர் அலுவலர்கள் என ஒன்பது பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. 26ம் தேதி வரை ஆய்வு தொடரும். ஆய்வு அறிக்கையை யு.ஜி.சி.யிடம் வழங்குவர். அதன்பின் ஓரிரு நாளில் அண்ணா பல்கலைக்கு எந்த வகையான சான்றிதழ் கிடைக்கும் என்பது தெரிய வரும். அண்ணா பல்கலைக்கு உயர்ந்தபட்ச அங்கீகாரமான ஏ கிரேடு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு பல்கலை வட்டாரம் தெரிவித்தது.

"சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புவோருக்கு தமிழ் புத்தாண்டு அன்று இளங்கோவடிகள் விருது வழங்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:இளங்கோவடிகள் நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்போருக்கோ, சிலப்பதிகாரத்தின் புகழ் பாடுவோருக்கோ, இளங்கோவடிகள் விருது வழங்கப்படும். தமிழ் புத்தாண்டு அன்று வழங்கப்படும் இந்த விருது 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது.* தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் செம்மல் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுக்கு மாவட்டத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவர். இது 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தகுதியுரை விருது உள்ளடக்கியது.* தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.*சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுடுமண், சுதை சிற்பம், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப் பொருட்களைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. பதவிகளை நிரப்புவதில் இழுபறி

அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர் பதவிகளை நிரப்புவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது. காலி பணி இடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பதவிகளை எதிர்பார்த்து காத்து இருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.தமிழக அரசு துறைகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்வதில் டி.என்.பி.எஸ்.சி. முதலிடம் வகிக்கிறது. ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.இந்த அமைப்பின் தலைவராக இருந்த நவநீத கிருஷ்ணன் சமீபத்தில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினரான பாலசுப்ரமணியன் தலைவர் பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார்.நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அடுத்த ஓரிரு நாட்களில் புதிய தலைவர் நியமன அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய தலைவர் நியமிக்கவில்லை. உறுப்பினர் பதவிகளும் அதிக அளவில் காலியாக உள்ளன.ஷோபினி, ஜேசுராஜா, ராஜா உட்பட ஏழு பேரின் பதவிகாலம் முடிந்ததால் இந்த பதவிகள் காலியாக உள்ளன. தற்போதைய நிலையில் கூடுதல் பொறுப்பாக தலைவர் பணிகளைச் செய்யும் பாலசுப்ரமணியன், பன்னீர் செல்வம், ரத்னசபாபதி, பெருமாள்சாமி, குப்புசாமி, செல்வமணி ஆகிய ஆறு பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.எந்த பதவிகளும் நிரப்பப்படாததால் தேர்வாணைய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக துறை வட்டாரம் தெரிவிக்கிறது. 192 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் உதவியாளர் பணி இடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதாகவும் துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவும் ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், அரசின் தாமதத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.62 வயது அல்லது பதவி ஏற்றதில் இருந்து ஆறு ஆண்டுகள் முடியும் வரை மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்பதால் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடங்களை எளிமையாகக் கற்பித்து வரும் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடங்களை எளிமையாகக் கற்பித்து வரும் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
செல்போனைப் பயன்படுத்தி மாணவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களைக் கற்பித்து வருகிறார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜி.ஜரீனா பானு. கற்றலில் புதுமையைப் புகுத்தி வருவதற்காக  இவருக்கு, ‘குளோபல் பிரிட்ஜ் ஐடி என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவின் பியர்ஸன் ஃபவுண்டேஷன் அமைப்பு உருவாக்கியுள்ள பிரிட்ஜ் ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்போன் மூலம் எங்கள் பள்ளியில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், அறிவியல் பாடங்களை கற்பித்து வருகிறோம். மாணவர்களின் பாடத் திட்டத்துக்கு ஏற்ற வீடியோ படங்கள் ஆடியோ வசனங்களுடன் செல்போனில் இணைத்துத் தந்திருக்கிறார்கள்.  இந்த செல்போனை எங்கள் பள்ளியில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து, அதன் மூலம் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களையும், இணையத்தில் கிடைக்கும் தகவல்களையும் பயன்படுத்தி பாடங்களை நடத்தி வருகிறோம். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மேலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வருகிறார்கள். சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்து வருகிறார்கள். சரிவரப் படிக்காத மாணவர்கள், தேர்ச்சியடையும் அளவுக்கு படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் ஆசிரியை ஜரீனா பானு. 
பிரிட்ஜ்  ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செல்போன் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ‘ஈசி வித்யா அமைப்பு’ பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சியைப் பெற்ற ஆசிரியை ஜரீனா பானு, இதை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருவதற்காக பியர்ஸன் ஃபவுண்டேஷன் அமைப்பின் குளோபல் பிரிட்ஜ் ஐடி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் சான்றிதழும், நினைவுப் பரிசும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் அடங்கும்.
செல்போனைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கும் முறை பற்றி நம்மிடம் விவரித்தார் ஜரீனா பானு.
அறிவியலில் உணவுச் சங்கிலி என்றொரு பாடம் உள்ளது. இந்தப் பாடத்தின்படி, புல்லை மான்கள் உண்ணும், மான்களை கரடி, புலி போன்றவை உண்ணும் என்பது போன்ற தகவல்கள் வரும். இதை வெறுமனே  பாடமாக நடத்தினால் மாணவர்களுக்கு போரடித்துவிடும். செல்போனில் உள்ள வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி மான்கள் புல் சாப்பிடும் காட்சியையும், புலிகள் மான்கள் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் காட்சியையும் டி.வி.யில் காண்பித்து விளக்கும்போது மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். இப்படி ஆங்கில இலக்கணத்தையும் விளையாட்டுப்போல வீடியோ காட்சிகள், ஆடியோ ஒலிகள் மூலம் கற்பிக்கிறோம். மாணவர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள். எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது, மேலும் உற்சாகத்துடன் பணியாற்ற என்னை ஊக்குவித்துள்ளது. இது எங்கள் பள்ளி ஆசிரியைகள், தலைமை ஆசிரியை அத்தியா பாத்திமா, மாநகராட்சி அதிகாரிகள் ஆகிய அனைவரின் ஒத்துழைப்பால் கிடைத்த ஒன்று" என்று மகிழ்கிறார் ஜரீனா பானு.

மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

திண்டுக்கல்: மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால், மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.சில பள்ளிகளுக்கு குதிரை மூலம் மட்டுமே செல்ல முடிகிறது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்வதில்லை. மொபைல் போன் சிக்னல் -ம் சரியாக கிடைக்காததால், ஆசிரியர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமம் உள்ளது. இதை பயன்படுத்தி சில ஆசிரியர்கள் சரியாக பள்ளிகளுக்கு செல்வதில்லை.அதேபகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் மூலம் பாடம் நடத்தசொல்லி, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், காடுகளில் வேலைக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மலைகிராம பள்ளிகளுக்கு சென்று ஆய்வுநடத்த வேண்டும். வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பிட்ட நேரமாவது பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியாக பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட். படித்தவர்களுக்கு சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு

 ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன் பி.லிட். படிப்பில் சேர்ந்து படித்தவர்களை சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட். படிப்பும் தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவியர் மூன்று ஆண்டு படிப்பான பி.லிட். முடித்தால் பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோவை மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில் சில ஆண்டுகளுக்கு முன் ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது.
உதாரணமாக 2007-08 கல்வியாண்டில் இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு குளறுபடிகளால் கல்வியாண்டுக்கான தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.
இதனால் டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின் ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். படிப்பில் சேர்ந்தனர்.
படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு அதிர்ச்சியே பதிலாக கிடைத்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில் பி.லிட். சேர்ந்திருப்பதால் அந்த பட்டம் செல்லாது என ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால் ஏராளமானோர் அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த 2007-08ம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து 2008-09ம் கல்வியாண்டில் படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால் செப்டம்பரில் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.
 படித்த படிப்புக்கான காலம் 2008-09வுடன் முடிவடைந்துவிட்டதால் 2009-10க்கான கல்வியாண்டில் பி.லிட். சேர்த்துக்கொண்டனர். அப்போது பல்கலைக்கழகம் தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
தற்போது இத்தனை ஆண்டு காத்திருப்பில் அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால் தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை. அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு எங்கள் வாழ்க்கை பலியாகிறது.
கடந்த ஆண்டில் இதேபோன்று படித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்

போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல் இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.

போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல் இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.
டி.ஆர்.பி. நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்த முறை டி.ஆர்.பி.க்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.
இந்நிலையை மாற்றி எளிமையான முறையில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து தற்போது டி.ஆர்.பி. தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால் கட்டணமும், வெகுமாக குறையும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயாக உள்ளது. இதுவே இணையதள முறைக்கு மாறினால் பதிவு கட்டணமாக மிகக் குறைந்த தொகையை வசூலிக்க வாய்ப்பு ஏற்படும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும் டி.ஆர்.பி. வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று பல வசதிகள் இருப்பதால் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது.
அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய அக்டோபர் 26ம் தேதி போட்டி தேர்வு நடக்கும் என டி.ஆர்.பி. அறிவித்துள்ளது. இதற்கு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பம் வழங்கப்படும் என டி.ஆர்.பி. அறிவித்துள்ளது.
இதற்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என டி.ஆர்.பி. எதிர்பார்க்கிறது. எனவே இந்த தேர்வில் இருந்து இணையதள பதிவு முறையை டி.ஆர்.பி. அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என டி.ஆர்.பி. வட்டாரம் நேற்று தெரிவித்தது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

 பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் ணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.


பேராசிரியர் - பெண்கள் ஆய்வுகள் ( இயக்குனர்). பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி : பி.ஹெச்டி., மற்றும் 10 ஆண்டுக்ள் அனுபவம்.

இணை பேராசிரியர் (உடற்கல்வி) - PB4 ஏ.ஜி. பி 9000 - - SCA (W) 1 போஸ்ட். கல்வித் தகுதி : பி.ஹெச்டி., மற்றும் 8 ஆண்டுகள் அனுபவம. 

உதவி பேராசிரியர் (உடற்கல்வி) - 3 போஸ்ட் ( 1 SCA-W; 1 எம்பிசி) - PB3 ஏ.ஜி. பி 6000 - கல்வித் தகுதி : உடற்கல்வி முதுகலை மற்றும் நெட் / SET / SLET.

CENTRAL TEACHER ELIGIBILITY TEST || மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு

மத்திய அரசின் கீழ் உள்ள கேந்திர வித்யாலயா (KVS), நவோதியா வித்யாலயா (NVS), மத்திய திபெத்தியன் போன்ற பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தேர்வு நடைபெறும் நாள்: 21.09.2014
ஆண்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2014 to 04.09.2014   ஆண்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.ctet.nic.in/

Applications are invited by the under signed for contractual recruitment as Data Processing Assistants in the Department of Public Health and Preventive Medicine, Government of Tamil Nadu.

தொகுப்பு ஊதியம் அடிப்படையில் 34 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. B.SC (CS) \BCA (OR) ANY DEGEREE WITH PGDCA படித்தவர்கள்    விண்ணப்பிக்கலாம்.     மாத தொகுப்பு ஊதியம் ரூ.15000 வழங்கப்படும். மேலும் அறிய http://www.tnhealth.org/dph/Prospectus.pdf  என்ற இணையதளத்தில் பார்க்கவும்
விண்ணப்பங்கள் http://www.tnhealth.org/dph/DPA%20Applicatio%20Form.pdf என்ற இணையதளத்தில் பதிவிரக்கம் செய்யலாம்.

VINAYAGA MISSIONS UNIVERSITY DDE MARCH 2014 RESULTS PUBLISHED | வினாயகா மிஸன்ஸ் பல்கலைக்கழகதின் தொலைதூர கல்வி இயக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன

வினாயகா மிஸன்ஸ் பல்கலைக்கழகதின் தொலைதூர கல்வி இயக்கத்தில் மார்ச்-2014 நடைபெற்ற இளநிலை ம்ற்றும் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை  http://vmrf.edu.in/vmude/  இணைய தளத்தில் பார்க்கலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேர 19-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ் நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 2400 பி.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்ங்கள் ஆன்லைனில் . www.onlinetn.com இந்த இணையதல்த்தில்  19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2014. மேலும் அறிய http://www.tnteu.in/

தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படும்

தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படும் என்று  அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். (அதில் முதுகலை ஆசிரியர்கள் 952, பட்டதாரி ஆசிரியர்கள் 2489, உயர் கல்வி இயக்குனர் 18). மேலும் சார்ந்த பணியிடங்கள் 75,  ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 340 -ம் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.

திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பாடுகின்றன.

Thiruvalluvar University, Serkkadu,
Vellore, Tamil Nadu
http://thiruvalluvaruniversity.ac.in/

Advertisement No.8392 to 8402
Advertisement
 date 17.07.2014
Last date 08.08.2014

Posts :
·  Personal Assistant to Vice-Chancellor - 1 Post for UR - PB3 GP 6600 - any Post Graduate with 3 years academic experience or 5 years administrative experience - Age 45 years
·  Superintendent - 9 Posts (2 UR ; 2 SC ; 2 MBC ; 3 BC) - PB2 GP 4800 - BSc Computer Science / BCA or any Bachelor's Degree with Diploma in Computer Applications and 5 years administrative experience - Age 35 years
·  Assistant cum Computer Operator - 23 Posts (7 UR ; 4 SC ; 4 MBC ; 8 BC) - PB1 GP 2600 - any Bachelor's Degree with Diploma in Computer Applications and 3 years experience - Age 35 years
·  Office Assistant - 4 Posts (1 UR ; 1 SC ; 1 MBC ; 1 BC) - Basic Pay 4800 GP 1300 - SSLC / 10th Std Pass or Fail - Age 35 years
·  Driver - 4 Posts (1 UR ; 1 SC ; 1 MBC ; 1 BC) - Basic Pay 4800 GP 1300 - 8th Std Pass and should have a valid Driving License to LMV and HMV with 5 years experience - Age 30 years to 50 years.
·  System Analyst - 2 Posts (1 UR ; 1 SC) - PB3 GP 5400 - BE / BTech in Computer Science and Engineering / MCA and structural query building, C++, Visual Basic, SQL, html, Photoshop and all other related software and hardware with experience in Data handling in Academic College area - Age 35 years
·  System Administrator - 2 Posts (1 SC ; 1 MBC) - PB2 GP 4400 - BE / BTech /MSc Computer Science and Engineering / MCA and 2 years experience in Administrator / Networking troubleshooting Widows server technology, server maintenance, VB, Oracle, Web Technology - Age 35 years
·  Laboratory Technician (Graduate) - 4 Posts (1 UR ; 1 SC ; 1 MBC ; 1 BC) - PB2 GP 4400 - Bachelor's Degree in Science / Electronics / Computer Applications with 3 years experience in teaching or research laboratory - Age 35 years.
·  Data Manager / Web Manager - 1 Post for UR - PB2 GP 4400 - BE / BTech / MCA Computer Science and Engineering and experience in Web designing, HTML, Server scripting and web management - Age 35 years
·  Electrician / Plumber - 2 Posts (1 UR ; 1 SC) - PB1 GP 2400 - ITI Trade Certificate in Electrician with 5 years experience in Electrical and Plumbing works - Age 35 years.
·  Gardener - 2 Posts (1 UR ; 1 SC) - Basic Pay 4800 GP 1300 - 8th Std Pass and experience in gardening and nursery works - Age 35 years

General Instructions :
Age limit provided here is for UR category only. Age relaxation applicable for BC / MBC / SC / ST as per govt norms.Application Fee Rs.100 for SC / ST / Differently Abled Candidates.Application Fee Rs.250 for BC / MBC / UR candidates.Demand Draft in favour of "The Registrar, Thiruvalluvar University, Vellore-632 115" payable at "Vellore".
Applications to be forwarded to The Registrar, Thiruvalluvar University, Vellore 632 115.
Application Cover must be superscribed as "Application for the Post of ..<name of post>.

TRB ANNOUNCED COMPETITIVE EXAM FOR ASST PROFESSOR POST IN ENGINEERING COLLEGES

பொறியியல் கல்லூரிகளில் துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 20.08.2014 கடைசி தேதி : 05.09.2014  தேர்வு நாள் : 26.10.2014

மேலும் விபரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் காணவும்http://trb.tn.nic.in/

பி.எட்., எம்.எட்., படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது

இந்தியா முழுவதும் கல்வி தரத்தை உயர்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பி.எஸ்.சி, பி.எ, படித்தவர்களுக்கு பி.எட்., என்ற ஆசிரியர் பயிற்சியும், பி.எட். படித்தவர்களுக்கு எம்.எட்., என்ற ஆசிரியர் பயிற்சியும், ஒரு ஆண்டு காலம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பி.எட்., எம்.எட்., படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்த கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக்குழு  பி.எட்., எம்.எட்., படிப்புகளின் காலத்தை 2 வருடமாக 2015-2016 ஆம் கல்வியாண்டு முதல் அமுல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் கல்வி உதவித் தொகைத் திட்டம்

தமிழக அரசின் ஆணை எண் : 92 ( தேதி : 11.09.2012 ) படி, +2 வகுப்புக்கு பின் உயர் படிப்புகளில் சேருகிற ஆதிதிராவிடர்கள், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்க்ள், பழங்குடிகள் சேரந்த மாணவ-மாணவிகளுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய அரசின் கல்வி உதவித் தொகைத் திட்டம் மூலம் தமிழக அரசே 2011-2012 கல்வியாண்டு முதல் வழங்குகின்றது. இந்த உதவித் தொகையை பெற,மாணவர்களின் குடும்ப வருமானம் 200000 -க்கு குறைவாக இருக்க வேண்டும். தமிழக அரசின் இணையதளத்தில் தமிழ் வடிவில் இந்த ஆணையை டவுன்லோடு செய்துகொள்ளலாம்

எஸ்.சி., எஸ்.டி., மாணவர் முதுகலைத் தொழில்படிப்பு உதவித் தொகைத் திட்டம்.

எம்.இ, எம்.டெக்., உள்ளிட்ட முதுகலைத் தொழில்படிப்புகள் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கபடுகிறது. எம்.இ, எம்.டெக், படிப்புகளுக்கு  மாதந்தோறும்  ரூ.5 ஆயிரமும்,இதர படிப்புகளுக்கு  ரூ.3 ஆயிரமும் கிடைக்கும். மேலும் அவசர நிதி உதவியாக பொறியியல் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், இதர படிப்புகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகைத் திட்டத்தின் வயது வரம்பு  ஆண்களுக்கு 45, பெண்களுக்கு 50. ஆண்டுதோறும் 1000 எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இந்த உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.நடப்பு நிதி ஆண்டுக்கான(2014-2015) கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்க்கு ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த உதவித் தொகைகளைப் பெறுவதற்கு யூ.ஜி.சி (UGC) யின் இணையதளத்தில் (www.ugc.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ராஜிவ்காந்தி தேசிய எஸ்.சி., எஸ்.டி., மாணவர் உதவித் தொகைத் திட்டம்.

 எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பில் மற்றும் பி.எச்டி, படிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு  உதவித் தொகையாக இது வழங்கப்படுகிறது. எம்.பில் படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.16 ஆயிரமும், பி.எச்டி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். மேலும், கல்வி உதவித் தொகையாக கலை, அறிவியல் சம்பந்தப்பட்ட எம்.பில் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கும், பி.எச்டி படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கும் உதவித் தொகையாக பெறலாம். இதேபோல், அறிவியல், பொறியியல் சம்பந்தபட்ட  படிப்புகள் எனில் முதல் 2 ஆண்டுகளுக்கு ரூ.12 ஆயிரமும், எஞ்சிய 3 ஆண்டுக்கு ரூ.25 ஆயிரமும் கிடைக்கும். நடப்பு நிதி ஆண்டுக்கான(2014-2015) கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்க்கு ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த உதவித் தொகைகளைப் பெறுவதற்கு யூ.ஜி.சி ( UGC)   யின் இணையதளத்தில் (www.ugc.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் - மவுலானா ஆசாத் தேசிய சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகை

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பில் மற்றும் பி.எச்டி, படிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு  உதவித் தொகையாக இது வழங்கப்படுகிறது. எம்.பில் படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.16 ஆயிரமும், பி.எச்டி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். மேலும், கல்வி உதவித் தொகையாக கலை, அறிவியல் சம்பந்தப்பட்ட எம்.பில் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கும், பி.எச்டி படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கும் உதவித் தொகையாக பெறலாம். இதேபோல், அறிவியல், பொறியியல் சம்பந்தபட்ட  படிப்புகள் எனில் முதல் 2 ஆண்டுகளுக்கு ரூ.12 ஆயிரமும், எஞ்சிய 3 ஆண்டுக்கு ரூ.25 ஆயிரமும் கிடைக்கும். நடப்பு நிதி ஆண்டுக்கான(2014-2015) கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்க்கு ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

யூ.ஜி.சி ( UGC) எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் உயர் கல்வி உதவித் தொகை

இந்தியாவில் உள்ள 650-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் உயர் கல்வி தரத்தை மேம்படுத்தும் பணியில் யூ.ஜி.சி (UGC)  எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் ம்ற்றும் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பல்வேறு விதமான உதவித் தொகைகளையும் வழங்குகிறது.இந்த உதவித் தொகைகளைப் பெறுவதற்கு யூ.ஜி.சி ( UGC)   யின் இணையதளத்தில் (www.ugc.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் ( ICAR ) உயர் கல்வி படிப்பு

டெல்லியில் தலமையகத்தை கொண்ட, மத்திய அரசின் வேளாண் அமைச்சகதின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில். உயர் அதிகாரம் படைத்த இந்த ஆய்வுக் குழுமம், 1929-ம் ஆண்டு சமூகப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியது. தற்போது இந்த ஆய்வு குழுமம் வேளாண் ஆராய்ச்சிக்கு முக்கியதுவம் அளித்து வருகிறது. மத்திய  வேளாண் துறை அமைச்சர் இதன் தலைவராக செயல்படுகிறார். நாடு முழுவதும் 49 வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், 4 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 தேசிய ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ்  செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்களில் அகில இந்திய அளவிலான 15 சதவீத இடங்களை நிரப்புவதற்கான  அகில இந்திய வேளாண் துறை நுழைவுத் தேர்வை  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்துகிறது. மேலும் விவரங்களை அறிய www.icar.org.in  என்ற இணையதளத்தில் காணலாம்.

GOVERNMENT JOBS



IRT Perundurai Medical College Perundurai (www.tngovernmentjobs.in)
IRT Perundurai Medical College (IRTPMC)
Perundurai, Erode 638 053 Tamil Nadu
(Institute of Road Transport)

Walk in Interview for Professor, Associate Professor, Assistant Professor Posts in IRT Perundurai Medical College Erode


Advertisement No.DIPR/647/Display/2014
Advertisement date 03.07.2014
Walk in Interview on 15.07.2014

Posts :
  • Professor - Salary as per Govt of Tamil Nadu norms - Qualifications as per Medical Council of India norms
  • Associate Professor - Salary as per Govt of Tamil Nadu norms - Qualifications as per Medical Council of India norms
  • Assistant Professor - Salary as per Govt of Tamil Nadu norms - Qualifications as per Medical Council of India norms

General Instructions : 
Retired Faculty Members can also apply for above posts.
Salary for Retired faculty members will be paid as consolidated pay.
Help Line Telephone Numbers 0429-220913, 09842721633, 09443545711, 09942344000.
Notification




V.O.Chidambaranar Port Trust (www.tngovernmentjobs.in)
V.O.Chidambaranar Port Trust
Tuticorin 628 004, Tamil Nadu
Telephone 0461-2352290

Applications are invited for Financial Advisor and Chief Accounts Officer Vacancy

Advertisement No.S-4/15/2013-E-I
Advertisement date 25.06.2014
Last date 31.07.2014

Post :
  • Financial Advisor and Chief Accounts Officer - 1 Post for UR category - IDA 43200 - Chartered Accountant or ICWA with 15 years experience - Age 45 years
Notification and Application Form http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx


Posted: 03 Jul 2014 06:40 AM PDT
Cochin Shipyard Ltd (www.tngovernmentjobs.in)
Cochin Shipyard Ltd
Kochi 682 015, Kerala


Online Applications are invited Fabrication, Outfit Assistant, Crane Operator, General Fabricator, Outfitter and Crane Operator Posts in Cochin Shipyard Ltd



Advertisement No.P&A/2(230)10
Advertisement date 20.06.2014
Last date Online 12.07.2014
Interview date 20.07.2014

Posts : 
  • Fabrication / Outfit Assistant / Crane Operator / General Fabricator / Outfitter / Crane Operator - 312 Posts - 12000 to 14000 pm consolidated pay - ITI Trade Certificate with 3 years experience - Age 35 years - by contract basis for 2 years
    • Sheet Metal Worker - 132 Posts
    • Welder - 21 Posts
    • Pipe Fitter (Plumber) - 97 Posts
    • Diesel Mechanic - 22 Posts
    • Instrumental Mechanic - 9 Posts
    • Electrician - 8 Posts
    • Electronic Mechanic - 2 Posts
    • Shipwright Wood - 2 Posts
    • Painter - 15 Posts
    • Crane Operator (EOT Cranes) - 4 Posts
General Instructions :
Selection by Written Test and Personal Interview.
Notification http://cochinshipyard.com/careers/welder%20on%20contract%20June%20%202014.pdf
Notification in Hindi http://cochinshipyard.com/careers/welder%20on%20contract%20June%20%202014_Hindi.pdf
Online Application Form http://e-recruitment.cochinshipyard.com/contract/



University of Madras Recruitments (www.tngovernmentjobs.in)
University of Madras
Chennai 600 005, Tamil Nadu

 Assistant Professor (Sangappalagai) Post in University of Madras


Advertisement No.
Advertisement date 03.07.2014
Last date 24.07.2014

Post : 
  • Assistant Professor for Sangappalagai - 1 Post for UR category - PB3 AGP 6000 - Post Graduate in Tamil (MA / MLit) with consistently good academic records and UGC's NET / SET / SLET / PhD
General Instructions :
Applications in copy of 8 sets to be submitted.Application Fee Rs.250 for SC / ST / (PH) Differently Abled Person candidates.Application Fee Rs.500 for BC / MBC / GEN candidates.Demand Draft in favour of "The Registrar, University of Madras" payable at Chennai.